நேர்கொண்ட பார்வை நடிகை ஷ்ரதா ஸ்ரீநாத் டாட்டூவிற்கு பின்னால் இவ்வளவு ரகசியமா.!

By Rajkumar · 28/4/2019

காற்று வெளியிடை, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் பெற்ற ஷ்ரதா ஸ்ரீநாத் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் ஆகஸ்ட் 10-ம் தேதி திரைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படம் இந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீ- மேக் என்பது அனைவருக்கும் தெரியும். அதில் நடித்த டாப்ஸி கதாபாத்திரத்தில் தான் நடிகை
ஷ்ரதா ஸ்ரீநாத் நடிக்க உள்ளார். இவர் ஏற்கனவே இந்தி படத்திலும் நடித்துள்ளார்.

இதையும் படியுங்க : இவர் தான் குறளரசனின் மனைவியா.! முதல் முறையாக வெளியான புகைப்படம்.! 

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஷ்ரதா ஸ்ரீநாத்திடம் அவரது மார்பில் வரையப்பட்டுள்ள டாட்டூ குறித்து கேள்வி கேட்கப்பட்டது. பதிலளித்த ஷ்ரதா ஸ்ரீநாத், எனக்கு இசை மிகவும் பிடிக்கும், நான் கல்லூரியில் படிக்கும்போதே மியூசிக்காக முதல் முறையாக சம்பளம் பெற்றேன்.

அதனை மறக்காமல் இருக்க அதை என்ன செய்வது என் யோசிக்கும்போது தான் எப்போதும் நினைவிருக்கும் வகையில் இசை சிப்பிளை டாட்டூவாக போட்டுக்கொள்ளலாம் என முடிவெடுத்தேன். எனக்கு beatles பிடித்த மியூசிக் பேண்ட் எனவே, அதையே டாட்டூவாக குத்திக்கொண்டேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full