இவர் தான் குறளரசனின் மனைவியா.! முதல் முறையாக வெளியான புகைப்படம்.!

0
1034
Simbhu Brother

நடிகர் மற்றும் இயக்குனரான டி ராஜேந்தர் மகனும் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்புவின் தம்பியுமானவர் குறளரசன். இவர் சிறு வயதில் சிம்புவை போல டி ராஜேந்தர் இயக்கிய பல்வேறு படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.சமீபத்தில் இவர் இஸ்லாம் மதத்திற்கு மாறியது பரபரப்பாக பேசப்பட்டது.

இயக்குநர்  டி.ராஜேந்தருக்கு இலக்கியா என்ற மகளும், சிலம்பரசன், குறளரசன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இலக்கியாவிற்கு திருமணம் ஆகிவிட்டது. 
காதல் தோல்வியால் தனது திருமணத்தை தள்ளிப்போட்டுள்ளார் சிம்பு என்று தகவல்.

இதையும் பாருங்க : தனது இரண்டு மாத மகனுடன் சென்ராயன் கொடுத்த போஸ்.! இதுவரை வெளிவராத புகைப்படம்.! 

- Advertisement -

இந்நிலையில், கடந்த மாதம் ராஜேந்தரின் இளையமகனும் சிம்புவின் தம்பியான குறளரசன் இஸ்லாம் மதத்திற்கு மாறினார்.  தந்தை ராஜேந்தர், தாய் உஷா முன்னிலையில் அவர் மதம் மாறினார். இதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் திருமண ஏற்பாடு செய்யப்பட்டது.


குறளரசன் மணக்கவிருக்கும் பெண்ணின் பெயர் நபீலா ஆர். அஹமத். பி.காம். முடித்துள்ள நபீலாவின் பெற்றோர் பெயர் ரஃபி அஹமத் – ரெஹ்மத் அஹ்மத்.இவர்களுடைய திருமண வரவேற்பு, நாளை (ஏப்ரல் 29-ம் தேதி) சென்னை கிண்டியிலுள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் உள்ள ராஜேந்திர ஹாலில் மாலை 7 மணிக்கு நடைபெறுகிறது.