நீட் தேர்வு குறித்து பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சீமான்-அமீர் அளித்திருக்கும் பதில் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் அமீர். இவர் ஆரம்பத்தில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக தன்னுடைய திரையுலக பயணத்தை தொடங்கினார். பின் இயக்குனர் பாலாவின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த சேது மற்றும் நந்தா ஆகிய படங்களில் அமீர் பணியாற்றியிருக்கிறார். பின்னர் 2002 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்து இருந்த மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தார் அமீர்.

இதற்குப் பிறகு இவர் ராம், பருத்திவீரன், ஆதிபகவன், பேரன்பு போன்ற பல படங்களை இயக்கி இருந்தார். இவர் இயக்கிய படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்து இருக்கிறது. மேலும், இவர் படங்களை இயக்குவது மட்டுமில்லாமல் Teamwork Production House என்ற பெயரில் சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை வைத்து இருக்கிறார். தற்போது அமீர் ஹீரோவாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு. இந்த படம் வருகிற பத்தாம் தேதி வெளியாக இருக்கிறது. தற்போது இந்த படத்தினுடைய ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.

Advertisement

சீமான் பேட்டி:

அந்த வகையில் இயக்குனர் அமீர், சீமான் இருவருமே இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்து இருக்கிறார்கள். அப்போது நீட் தேர்வு குறித்து கேட்டதற்கு சீமான், நடந்த முடிந்த நீட் தேர்வில் பல பிரச்சனைகள் நடந்தது அனைவருக்குமே தெரியும். இதனால் தான் நாங்கள் நீட் தேர்வே ண்டாம் என்று எதிர்க்கிறோம். நீட் தேர்வின் மூலம் போலியான மருத்துவர்களை தான் உருவாக்குகிறார்கள். தமிழகத்தில் எத்தனையோ போலியான மருத்துவர்கள் பிடிபட்டு இருக்கிறார்கள்.

நீட் தேர்வு குறித்து சொன்னது:

சமீபத்தில் கூட வட இந்தியாவில் 50க்கும் மேற்பட்ட போலி மருத்துவர்கள் கைது செய்திருக்கிறார்கள். நீட் தேர்வு போலி மருத்துவர்களை உருவாக்குகிறதா? தரமான மருத்துவர்களை உருவாக்குகிறதா? என்பது தெரியவில்லை. ஆனால், தரமான மருத்துவர்களை உருவாக்க அமெரிக்காவில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு என்ன அவசியம்? இந்திய மாணவர்களுக்காக மத்திய அரசால் ஒரு தேர்வு கூட நடத்த முடியாதா? நீட் தேர்வு எழுத செல்லும் போது தலைமுடி, ஆடை, தோடு அனைத்தையும் சோதனை செய்கிறார்கள்.

Advertisement

அமீர் அளித்த பேட்டி:

இதே வட இந்தியாவில் இந்த மாதிரி எல்லாம் அனுமதிக்கிறார்களா? தேர்வு எழுத வரும் மாணவர்களை எந்த மனநிலையில் அனுமதிக்கிறார்கள்? அவர்களுக்கு ஒரு பயத்தை ஏற்படுத்தி தான் உள்ளேயே அனுமதிக்கிறார்கள். 12-ம் வகுப்பு பொது தேர்வில் 1200க்கு 1199 மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனும், 800 மதிப்பெண் ஒரு பெற்ற மாணவனும் நீட் தேர்வில் எழுதுகிறார்கள். அதில் 800 மதிப்பெண் பெற்ற மாணவன் நீட் தேர்வில் வெற்றி பெறுகிறான். அவர் மருத்துவர் ஆகலாம். அதே 1199 மதிப்பெண் பெற்ற மாணவர் நீட் தேர்வில் தோல்வியடைந்து விட்டால் அவரால் மருத்துவராக முடியாது. எதற்கு இந்த பொது தேர்வு வைக்க வேண்டும்.

நீட் தேர்வில் நடக்கும் பிரச்சனைகள்:

மொத்தமாகவே மாணவர்கள் அனைவருக்கும் நீட் தேர்வு பயிற்சியை கொடுக்கலாமே? ஒரு வழியாக நீட் தேர்வில் வெற்றி பெற்று கல்லூரியில் சேர்ந்தால் அங்கு பாடம் எடுக்கும் பேராசிரியர் என்ன நீட் தேர்வில் பயிற்சி பெற்றவரா? அவர் வழக்கமான பழைய ஆசிரியர் தானே, பாடத்திட்டத்தில் ஏதாவது மாற்றம் செய்கிறீர்களா? இப்படி எல்லாம் இருக்கும்போது எதற்கு இந்த நீட் தேர்வு? என்று கூறியிருந்தார். இவரை அடுத்து இயக்குனர் அமீர், என்னுடைய மகள் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நீட் தேர்வு எழுத போனால் அவருடைய புர்காவை கலட்ட சொல்லி இருக்கிறார்கள். அவர் நீட் தேர்வு வேண்டாம் என்று வந்துவிட்டார். தேர்வு எழுதும்போது நீங்கள் தோடு, செயினில் பிட்டு எடுத்துக் கொண்டு செல்கிறீர்கள் கழட்டுங்கள் என்று சொன்னால் அவர்களுக்கு அச்சம் தான் ஏற்படும். இதனை யாராவது கேட்டு கேட்டுள்ளார்களா? என்று இருவருமே வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.

Advertisement