பெண் வேட்பாளரை பற்றி பேசிய சீமான்.! வெளியான ஆடியோ பதிவு.! தொண்டர்கள் ஷாக்.!

0
1081
Seeman
- Advertisement -

நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்க இருப்பதால் பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் மும்முரம் காட்டி வருகிறது. அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் தனித்துப் போட்டியிடவதோடு 40 தொகுதிகளில் 20 பேர் ஆண்கள் மற்றும் 20 வேறு பெண்களை நிற்க வைக்கப் போவதாக சமீபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அறிவித்திருந்தார். இந்த நிலையில் சீமான் கட்சித் தொண்டர் இடம் கோபமாக பேசிய ஆடியோ பதிவு ஒன்று வெளியாகியுள்ளது

-விளம்பரம்-

சீமான் பேசிய ரகசிய ஆடியோ லீக் ?

நாட்டாமை ಅವರಿಂದ ಈ ದಿನದಂದು ಪೋಸ್ಟ್ ಮಾಡಲಾಗಿದೆ ಸೋಮವಾರ, ಮಾರ್ಚ್ 18, 2019

அதில் நிர்வாகியை தொடர்புகொண்ட சீமான் ஏய் நீ யாருக்கு சீட் கொடுக்கணும், கொடுக்க கூடாது என்று ஆர்டர் போடுறியாம் என்று மிரட்டும் தொனியில் பேசுகிறார் அதற்கு அவர் அண்ணா நான் யாரையும் மிரட்டவில்லை களத்தில் பணியாற்றும் யாருக்காவது சீட் கொடுங்கள் நாங்கள் வேலை செய்கிறோம் என்று சொல்கிறார்.

இதையும் படியுங்க : மீண்டும் விஜய்யை சூப்பர் ஸ்டார் என்று புகழ்ந்த சீமான்.! வைரலாகும் வீடியோ.!

- Advertisement -

அதற்கு சீமான் நான் சொல்வதற்குத்தான் சீட் நான் சொல்லும் வேலையை செய் இல்லை என்றால் ஓடிவிடு என்கிறார், அதற்கு தொண்டர் நீங்களே இப்படி பேசலாமா என்று கேட்க நான் தான் சொல்கிறேன் நான் சொல்வதை கேட்பதுதான் உன் வேலை என்றார் சற்று கோபமாக கூறுகிறார். அதற்கு அந்த தொண்டர் கடைசி வரை நாங்கள் போஸ்டர் ஓட்ட வேண்டியது தானா என்கிறார்.

Advertisement