அவருக்கு ‘வாழ்த்துக்கள்’ படம் புடிக்கல – பிரபாகரன் குறித்து பேசிய சீமான் – கேலி செய்த விஜய் பட இயக்குனர்.

0
3362
- Advertisement -

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு அறிமுகம் தேவையில்லை. அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் பரீட்சயமானவர். சீமான் அவர்கள் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். பின்னர் ஒரு சில படங்களில் நடித்து வந்தார். பிறகு சினிமாவில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அரசியலில் குதித்து விட்டார். தற்போது சீமான் அவர்கள் முழு நேர அரசியல்வாதியாக திகழ்ந்து வருகிறார். இவர் சி. பா. ஆதித்தனார் நிறுவிய நாம் தமிழர் கட்சியை தற்போது தலைமையேற்று நடத்தி வருகிறார். இவர் சோசியல் மீடியாவின் சர்ச்சை நாயகன்.

-விளம்பரம்-

இவர் போடும் கூட்டங்களில் எப்போதும் சர்ச்சைக்கு பஞ்சமே இல்லை. அந்த அளவிற்கு எதாவது ஒரு விஷயத்தை பேசி விட்டு சோசியல் மீடியாவில் சர்ச்சைகளை கிளம்புவார். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சீமான் அவர்கள் சத்யராஜ் நடித்த அமைதி படை படத்தில் நடித்து உள்ளார். மேலும், இயக்குனர் சீமான், பிரபல இயக்குனரான பாரதி ராஜாவின் உதவியாளராக பணியாற்றியவர் தான்.

இதையும் பாருங்க : கேப்டன் விஜயகாந்தின் இரண்டு மருமகளை பார்த்துளீர்களா ? இதோ புகைப்படம்.

- Advertisement -

உதவி இயக்குனராக இருந்த சீமான், கடந்த 1996 ஆம் ஆண்டு பிரபு நடிப்பில் வெளியான ‘பாஞ்சாலங்குறிச்சி’ படத்தின் மூலம் இயக்குனரானார். அதன் பின்னர், இனியவளே, வீரநடை, தம்பி, வாழ்த்துக்கள் போன்ற பல படங்களை இயக்கினார். இயக்குனர் சீமான் பல மேடைகளிலும் பேட்டிகளிலும் பிரபகாரணனுடன் தனக்கு உண்டான உறவு குறித்து அடிக்கடி சொல்லுவார்.

அந்த வகையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற சீமான், பிரபாகரன் தன்னுடைய படங்கள் குறித்து சொன்னதை நினைவு கூர்ந்தார். அதில், வாழ்த்துக்கள் படம் வெளியான ஒருவாரம் கழித்து நான் அவரை (பிரபாகரன்) சந்தித்தேன். வாழ்த்துக்கள் படம் தோல்வியடைந்து விட்டது. பின்னர் அவருக்கு எதுக்கு பூ, கவிதை போன்ற படம் என்று அவர் கேட்டதாகவும். நமக்கு ‘தம்பி’ மாதிரி படம் தான் எடுக்கணும் என்று கூறியுள்ளார் என்று சீமான் அந்த வீடியோவில் பேசியுள்ளார்.

-விளம்பரம்-
Facebook

சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்த ட்விட்டர் வாசி ஒருவர் ‘வாழ்த்துக்கள் படம் பிளாப் ஆனதுக்கு பிரபாகரன் வருத்தம் சொன்னாப்லயாம்.. அடேய் அவரு இட்லி கறி சினிமான்னு பார்த்துட்டு இருந்தா எப்போ தான் அவரு சிங்களன் கூட சண்டை செஞ்சாரு???’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வீடியோவிகற்கு கீழே விஜய்யின் சச்சின் பட இயக்குனர் ஜான் மகேந்திரன் ‘ஷபா முடியல’ என்று கேலியாக கமன்ட் செய்துள்ளார்.

Advertisement