சமீப காலமாக விஜயின் அரசியல் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. தமிழ் சினிமா உலகில் பல ஆண்டு காலமாக முடி சூடாக மன்னனாக திகழ்ந்து கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவருக்கு கோடிக்கணக்கான பேர் ரசிகர்களாக இருக்கிறார்கள். இதனால் விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் ரசிகர்கள் மன்றம் வைத்து இருக்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.

சமீபத்தில் விஜய் அவர்கள் மக்கள் இயக்கத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிக்கான ஆலோசனை கூட்டத்தை நடத்தி இருந்தார். இதன் மூலம் விஜய் அரசியல் வருவதற்கு அடுத்த கட்டமாக தான் இதையெல்லாம் செய்கிறார் என்று பலரும் கூறுகின்றனர். அதோடு விஜய் விரைவிலேயே அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.பின் இன்னும் சில தினங்களில் விஜய் தன்னுடைய கட்சியின் பெயரை டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய இருப்பதாக கூறப்பட்டது.

Advertisement

இந்த நிலையில் விஜய் தன்னுடைய கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த பெயரை விஜய் அறிவித்ததில் இருந்து விஜயின் மன்ற உறுப்பினர்கள், ரசிகர்கள் என பலருமே உற்சாகத்தில் இருக்கிறார்கள். இதனை அடுத்து விஜய் அவர்கள் இன்று மக்கள் இயக்கத்தின் தலைமை நிர்வாகியான புஸ்ஸி தலைமையில் மன்ற நிர்வாகிகளுடன் இணைந்து தன்னுடைய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருக்கிறார்.

அதோடு 2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் விஜய் போட்டியிடவில்லை. மேலும், 2026 ஆம் ஆண்டு நடக்கும் சட்டமன்ற தேர்தலுக்காக தயாராகுவோம் என்று விஜய் சொல்லியிருக்கிறார். பின் மதுரையில் பிரம்மாண்ட மாநாட்டை நடத்த திட்டமிட்டு வருகின்றனர். இப்படி முழு நேர அரசியலில் விஜய் ஈடுபட இருப்பதால் சினிமாவிலிருந்து விலகுவதாக இருக்கிறார்.

Advertisement

தற்போது நடித்துவரும் கோட் படத்தை தவிர வேறு எந்த படத்திலும் விஜய் கமிட்டாகவில்லை என்று கூறப்படுகிறது. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.இப்படி ஒரு நிலையில் விஜய் ஆரம்பித்துள்ள கட்சியின் பெயரில் பிழை இருப்பதாக பிரபல தமிழ் ஆசிரியர் கதிரவன் ஆறுமுகம் குறிப்பிட்டு இருந்தார். அதில் அவர் விஜய்யின் கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்று வைக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றி என்ற சொல்லுக்கும் பின்னால் ‘க்’ வர வேண்டும்.

Advertisement

எனவே ‘தமிழக வெற்றி கழகம்’ என்பதற்க்கு பதலாக ‘தமிழக வெற்றிக் கழகம்’ என்று திருத்தம் செய்யுமாறு அன்போடு வேண்டிக்கொள்கிறேன் என்று கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் இதே விஷயத்தை பற்றி சீமான் கூறி இருக்கும் வீடியோ ஒன்றை கதிரவன் பகிர்ந்துள்ளார். அதில் பேசியுள்ள சீமான் ‘வெற்றிக்கே ஒரு க் போடல, ஒற்று போட வேண்டும் போற்றுவார்’ என்று கேலியாக பேசி இருக்கிறார்.

Advertisement