அத சொன்னதும் ஐயோ தெய்வமேனு என் கால்ல வந்து விழுந்தாரு வடிவேலு - சீமான் அண்னனின் லேட்டஸ்ட் வீடியோ.

By Rajkumar · 11/9/2021

பல ஆண்டுகளாக இருந்த ரெட் கார்டு தடைநீக்கப்பட்டு தற்போது வடிவேலு படங்களில் நடிக்க இருக்கிறார். சமீபத்தில் வடிவேலு நடிக்கும் படத்தின் பிரெஸ் மீட் நடைபெற்றது. இந்த சந்திப்பின் போது முதல்வர் ஸ்டாலினை சந்தித்த பின்னர் தான் உங்கள் பிரச்சனைகள் நீங்கியதா என்று கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த வடிவேலு, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி. அவரை பார்த்த நாள் முதல் எனக்கு நல்லது நடக்கிறது. 'சீக்கிரம் படங்களில் நடிக்க வேண்டும்' என்று அவர் கூறியதை மறக்க முடியாது என்று கூறி இருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1436650883362615297

இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த சீமானிடம், வடிவேலு பிரச்சனையில் முதல்வர் தலையிட்டு தான் தீர்த்து வைத்தாரா என்று கேள்வி கேட்கப்பட்டது. இதற்க்கு பதில் அளித்த சீமான், முதல்வர் இந்த பஞ்சாயத்தை தீர்க்கவில்லை நான் தான் அதை தீர்த்து வைத்தேன் என்று கூறியுள்ளார்.

இதையும் பாருங்க : மணிரத்னத்துக்கு போட்டியாக பொன்னியின் செல்வனை எடுக்கும் ரஜினி மகள். அதிகாரபூர்வ அறிவிப்பு.

மேலும், விவேக் இடத்தை நான் தான் பூர்த்தி செய்ய வேண்டும் என்று வடிவேலு சொன்னது குறித்து கேட்கப்பட்டதற்கு, என் பங்காளி விவேக் இடத்தை யாரும் நிரப்ப முடியாது. முதலில் வடிவேலு இடத்தை நிரப்ப தான் இன்னோருத்தன் பிறந்து வர வேண்டும். எங்க அண்ணன் என்னுடன் சொன்னது தமிழ் சினிமாவில் சிவாஜி, வடிவேலு இது ரெண்டு தானே அடையாளமா இருக்குன்னு சொன்னாரு.

https://twitter.com/rajaputthiran1/status/1435188001030561793

இதை நான் வடிவேலுவிடம் சொன்னதும், ஐயோ தெய்வமேனு என் கால்ல விழுந்துட்டான். என் கால்ல விழாத என் அண்ணன் கால்ல விழுன்னேன். அப்படி எங்க அண்ணனே பாராட்டிய அசாத்திய கலைஞன் வடிவேலு. இன்னிக்கும் அவன பத்தி மீம்ஸ் எல்லாம் போடுறாங்க. அவன் இல்லாம ஒன்னுமே இல்ல. அதனால் அவரை விவேக்குடன் ஒப்பிட கூடாது. அவர் தனி இவர் தனி என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full