வரலாற்று சிறப்புமிக்க காவியங்களில் ஒன்றான பொன்னியின் செல்வன் கதையை திரைப்படமாக எடுத்து வருகிறார் இயக்குனர் மணிரத்னம். இவர் வித்யாசமான கதைகளை எடுப்பதில் கைத்தேர்ந்தவர். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து உள்ளனர். தற்போது பொன்னியின் செல்வன் படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
மேலும், பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியிட இருக்கிறார்கள். அதோடு ஏ ஆர் ரஹ்மான் இந்த படத்திற்கு இசை அமைத்து உள்ளார். இந்நிலையில் தற்போது ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்கள் தயாரிப்பில் ‘புதுவெள்ளம்’ என்கிற பெயரில் பொன்னியின் செல்வன் நாவலை வெப்சீரிஸ்சாக உருவாக்க இருப்பதாக தெரியவந்து உள்ளது.
இதையும் பாருங்க : இந்த வயதில் பட வாய்ப்பிற்காக இப்படி செய்தேனா – கனகா வெளியிட்ட உருக்கமான வீடியோ.
மேலும், இதனை சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ஏற்கனவே மணிரத்னம் அவர்கள் திரைப்படமாக உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் தற்போது வெப்சீரிஸ் ஆகவும் உருவாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இந்த படம் குறித்து அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பலரும் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து ஆவலுடன் காத்துக் கொண்டு இருக்கின்றனர். அதோடு மணிரத்னத்தின்பொன்னியின் செல்வன் படம் குறித்து பல கருத்துக்களும், செய்திகளும் சோசியல் மீடியாவில் வந்த வண்ணம் உள்ளன.