விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் தளபதி 67 பெயரை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்ற சொல்லியிருப்பது தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமீபத்தில் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் வெளியாகி இருந்த ‘வாரிசு’ படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. விஜய் நடிப்பில் இறுதியாக வெளியான பீஸ்ட் மற்றும் வாரிசு என இரண்டும் ரசிகர்களை திருப்த்தி படுத்த தவறிய நிலையில் விஜய்யின் அடுத்த படத்தை தான் ரசிகர்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

அதற்கு முக்கிய காரணமே அந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார் என்பதால் தான். மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என்று அடுத்தடுத்து வெற்றிப்படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது நடிகர் விஜய்யுடன் இணைந்து இருக்கிறார். இந்த படத்தின் பூஜை கடந்த மாதம் நடைபெற்ற நிலையில் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்புகளுக்காக படக்குழு காஷ்மீர் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

Advertisement

காஷ்மீரில் ஷட்டிங் :

இப்படி நிலையில் தான் லோகேஷ் கனகராஜ் மற்றும் தளபதி 67 படக்குழு அனைவரும் காஷ்மீர் சென்றனர். இவர்கள் காஷ்மீர் செல்கையில் படக்குழுவின் பல புகைப்படங்களும், விடீயோக்களும் சோசியல் மீடியாவில் படு பயங்கரமாக வைரலாகியது. அதோடு பலரும் படத்தில் நடிக்கும் நடிகர்களை வைத்து ரசிகர்கள் ஒவ்வொரு கதைகளை கூறி வந்தனர். மேலும் பலரும் இந்த கதை லோகேஷ் சினிமெடிக் யூனிவெர்சில் வரும் என்று உறுதியாக கூறி வருகின்றனர் அதற்கான வாய்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது.

லியோ படம் குறித்து சீமான் :

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியில் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது தம்பி விஜய்யின் “லியோ” படத்தின் தலைப்பை தமிழில் மாற்ற வேண்டும் வேண்டும் கூறினார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய சீமான் அவர்கள் கூறுகையில் “தம்பி விஜய் படத்தை தமிழர்கள் தான் பார்க்கிறார்கள். நம்முடைய தாய் மொழியை அழியாமல் சிதயாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இந்த பொறுப்பு தம்பி விஜய்க்கும் இருக்கிறது.

Advertisement

பெயரை மற்ற வேண்டும் :

சமீப காலமான தம்பி விஜய்யின் படங்கள் தொடர்ந்து பிகில், விசில் என வருகிறது. அதனை அவர் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று கூறினார் சீமான். இதே போன்று தளபதி விஜய் நடித்த பிகில், மாஸ்டர் படத்தின் தலைப்பும் இதே போன்ற சர்ச்சையான விஷியத்திற்கு உள்ளாகியது. விசிக கட்சியை சேர்ந்த வன்னி அரசு “விஜய்யின் தாய்மொழி தமிழாக இருக்கும் போது அவர் நடிக்கும் படங்கள் ஆங்கிலத்தில் வருவது குழப்பமாக இருக்கிறது என குற்றம் சாடியிருந்தது குறிப்பிடதக்கது

Advertisement
Advertisement