கடந்த சில தினங்களுக்கு முன்னர் கோவை தம்பதி ஒருவர் தங்கள் மகளுக்கு சாதி, மதம் இல்லை என்ற சான்றிதழ் வாங்கி இருந்தார்கள். கோவை மாவட்டம் கே கே புதூர் சேர்ந்தவர் நரேஷ் கார்த்திக். தற்போது அவருக்கு 33 வயதாகிறது. இவருக்கு மூன்றரை வயது மகள் இருக்கிறார். இதனால் இவர் தன்னுடைய மகளை எல்கேஜி வகுப்பில் சேர்க்க பல்வேறு பள்ளிகளை நாடி இருந்தார். ஆனால், பள்ளியில் ஷீட் கிடைக்கவில்லை. அந்த சிறுமியின் பெற்றோர்கள் விண்ணப்பத்தில் ஜாதி மதம் குறிப்பிடவில்லை. இதனால் பள்ளிகளில் அனுமதி கிடைக்கவில்லை. இதை அடுத்து சிறுமியின் தந்தை தனது மகளுக்கு ஜாதி மதம் இல்லை என்ற சான்றிதழ் வாங்க முயற்சி செய்திருந்தார்.

பின் பல போராட்டங்களுக்கு பிறகு இவருக்கு வருவாய் துறை முதல் முறையாக இந்த சான்றிதழ் வழங்கி இருக்கிறது. மேலும் இது குறித்து குழந்தையின் பெற்றோர் நரேஷ் கார்த்திக் கூறியிருந்தது,பெற்றோர் தங்கள் குழந்தைகளின் ஜாதி மதம் குறிப்பிடத் தேவை இல்லை. இதை 1973ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து பல பள்ளிகளுக்கும் தெரியாமல் இருந்தது தான் வேதனைக்குரிய விஷயம். வருவாய் துறையினரை சந்தித்து பேசியபோது அவர்களுக்கும் இது குறித்து தெரியவில்லை.

Advertisement

குழந்தைக்கு கிடைத்த சான்றிதழ் :

பிறகு கோவை கலெக்டரை தொடர்புகொண்ட போது அவர் வடக்கு தாசில்தார் தொடர்பு கொள்ள அறிவித்திருந்தார்.அதன் பின்னரே குழந்தைக்கு சான்றிதழ் கிடைத்தது. எனது குழந்தைக்கு வருங்காலத்தில் ஜாதி ரீதியான இட ஒதுக்கீடு உள்ளிட்ட எந்த சலுகையும் தேவையில்லை. ஜாதியை இணைக்க விண்ணப்பிக்க மாட்டேன். மேலும், இது புதிய நடைமுறை என்பதால் ஜாதி இல்லை சான்றிதழ் வழங்க காலதாமதம் ஏற்பட்டது. இனி வரும் குழந்தைகளுக்கு சான்றிதழ் எளிதில் கிடைக்கும் என்று கூறி இருந்தார். இப்படி கோவை பெற்றோர்கள் செய்திருக்கும் செயல் சோசியல் மீடியாவில் வைரலானது தொடர்ந்து பலரும் பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் இதுகுறித்து பதிவிட்டு இருந்த இயக்குனர் சீனுராமசாமி ‘இவரின் இச்செயல் சிந்திக்க வைக்கிறது. தன் குழந்தைக்கு பெற்றவர் தரும் சிறந்த சுதந்திரம் இது எனவும் எண்ணிப்பார்க்கிறேன் பிறப்பில் ஒட்டுவதை பின் எப்படி நீக்குவது.???’ என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ஒரு நிலையில் சீனு ராமசாமியின் இந்த பதிவிற்கு கமன்ட் போட்ட ஒரு ரசிகர் ‘இது சாதி ஒழிப்பு அல்ல, ‘சதி’. சாதி ‘சான்றிதழ்களில்’ நிலவவில்லை, ‘சமூகத்தில்’ தான் நிலவுகிறது.

Advertisement

சீனு ராமாசாமி பாராட்டு :

சான்றிதழ் ஒழிந்தால் சாதிய மனநிலை மாறிவிடுமா? சான்றிதழ் பார்த்து தான் சாதிய தெரிஞ்சிக்கிறாங்களா? சாதிசான்றிதழ் ஒழிப்பு என்பது இட ஒதுக்கீட்டை அழிக்க, பார்பனியம் செய்யும் சதி.’ என்று பதிவிட்டு இருந்தார். இதற்கு பதில் அளித்த சீனு ராமசாமி ‘ஜாதி மதம் அடையாளம் விரும்பாதோர் சர்ட்டிபிகேட் பெற்றுக்கொள்ளலாம் என்று ஒரு G.O பாஸ் செய்தார்கள் முன்பு கேரள அரசு மதம் ஜாதி இல்லாமல் வாழ விரும்புகிறவர்களுக்கு நாம் உரிமை தரவேண்டும்.

Advertisement

ட்விட்டர் வாசி கேட்ட கேள்வி :

ஏனெனில் அரசியல் சாசன சட்டப்படி இந்தியா மதச்சார்பற்ற நாடு.அவர் ஒதுக்கீடு பத்தி பேசலயே என்று பதில் அளித்து இருந்தார். இதற்கு பதில் அளித்த அந்த நபர் ‘இட ஒதுக்கீடு பத்தி பேசவில்லை தோழர், ஆனால் இந்த சான்றிதழ் அன்னாரது இடஒதுக்கீடு உரிமையை மறுக்கிறது. இதற்கு பதிலாக, சாதி மறுப்பு மணம் புரிந்தோருக்கு தனி இட ஒதிக்கீடே வழங்க வேண்டும். என்று கூற அதற்கு சீனு ராமசாமி :-

இட ஒதுக்கீடு பத்தி பேசவில்லை தோழர், ஆனால் இந்த சான்றிதழ் அன்னாரது இடஒதுக்கீடு உரிமையை மறுக்கிறது. இதற்கு பதிலாக, சாதி மறுப்பு மணம் புரிந்தோருக்கு தனி இட ஒதிக்கீடே வழங்க வேண்டும். அவர் ஜாதி மட்டுமல்ல மதமும் இல்லை என்றுதான் சான்றிதழ் பெற்றிருக்குறார்.கவனிச்சீங்களா’ என்று கூறி இருந்தார். ஆமாம் தோழர், சாதி மறுப்பு மணம் புரிந்தோருக்கு இட ஒதுக்கீடு.

விவாதம் செய்த சீனு ராமசாமி :

மற்றவர்களுக்கு வகுப்பு வாரியாக இட ஒதுக்கீடு.ஆனால், இது சாதி ஒழிப்புக்கான படியாகவோ, அல்லது மதம் துறந்து வாழ்வதற்கான படியாகவோ அமையாது தோழர். மாறாக BC/MBC மக்களிடம் குடி கொண்டுள்ள, இட ஒதுக்கீடு வெறுப்பு என்ற பேராபத்துக்கு தீனி போட்டு மேலும் பிளவை கொண்டுவரும் என்ற அச்சத்தில் தான் சொல்கிறோம் என்று கூறி இருந்தார். தற்போது இந்த விவாதப்பதிவு ட்விட்டர் பெரும் வைரலாகி வருகிறது

Advertisement