மாமனிதனை உங்களால் கொள்ள முடியாது - ப்ளூ சட்டை விமர்சனத்திற்கு சீனுராமசாமி போட்ட பதிவு. கேலியாக பதில் கூறிய ப்ளூ சட்டை.

By Rajkumar · 26/6/2022

ப்ளூ சட்டை மாறனுக்கு இயக்குனர் சீனு கொடுத்து இருக்கும் பதிலடி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. இவர் நடிப்பில் வெளிவந்த பல படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்று இருக்கிறது. அதோடு இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. தமிழ் சினிமாவில் தன்னுடைய கடின உழைப்பால் அபார வளர்ச்சி அடைந்தவர் விஜய்சேதுபதி.

https://www.youtube.com/watch?v=pa11CiLCSzY

ஆரம்பத்தில் இவர் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் தற்போது முன்னணி நடிகராக மிரட்டி கொண்டு வருகிறார். மேலும், இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என்று பல மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்த படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த படத்தில் நயன்தாரா, சமந்தா, கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த், கலா சமந்தா, உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள்.

இதையும் பாருங்க : ஏன் டா, நீ என்ன அவ்ளோ பெரிய ஆளா, உன்ன வெட்டி என் ஜாதிக்காரன் முன்னாடி போட்றுவேன் - பணத்தை திருப்பு கெட்டவரை மிரட்டிய மதுவந்தி. வெளியான ஆடியோ.

விஜய் சேதுபதி நடித்த படங்கள்:

இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்து இருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகி இருக்கிறது. மேலும், இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து லோகேஷ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியாகி இருந்த விக்ரம் படத்தில் விஜய் சேதுபதி நடித்து இருந்தார். இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று தந்து இருக்கிறது.

மாமனிதன் படம் ரிலீஸ்:

இந்த படத்தில் விஜய் சேதுபதி பயங்கர வில்லனாக மிரட்டி இருந்தார். இதனை அடுத்து தற்போது இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் மாமனிதன். இந்த படத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி, ஆர்.கே. சுரேஷ் உள்ளிட்ட பல காயத்ரி, நடித்து இருக்கிறார்கள். இந்த படத்திற்காக இளையராஜாவும், யுவன் சங்கர் ராஜாவும் சேர்ந்து இசை அமைத்திருக்கின்றனர். இது விஜய் சேதுபதி- சீனு ராமசாமி கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது படம்.

https://twitter.com/seenuramasamy/status/1540557869845622785

இயக்குனர் சீனு போட்ட டீவ்ட்:

ரசிகர்கள் படத்தை பார்த்து தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இந்த படம் குறித்து ப்ளூ சட்டை மாறன் வழக்கம்போல் ரிவ்யூ கொடுத்திருக்கிறார். அதில் அவர், மெகா சீரியல் ஓடுவது போலவே படம் இருக்கிறது என்றும் தேவையில்லாத காதல் காட்சிகள் வருகிறது என்றும் விமர்சித்திருந்தார். இப்படி ப்ளூ சட்டை மாறன் மாமனிதன் படம் குறித்து விமர்சித்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்த படத்தின் இயக்குனர் சீனு அவர்கள் டீவ்ட் ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், இனிய மாறா வணக்கம்.

https://twitter.com/tamiltalkies/status/1540858541241958400

ப்ளூ சட்டை மாறன் டீவ்ட்:

உங்கள் விமர்சனத்திற்கு எனதன்பு நகை ஆர்டர் குடுக்க மகளோடு போயிருக்கார் வாங்க தனியா போகலாம் இல்லையா? மனிதனை கொல்லலாம் மாமனிதனை உங்களால் கொல்ல முடியாது நன்றி என்று கூறியிருக்கிறார். மேலும், இந்த வீட்டை பார்த்த ப்ளூ சட்டை மாறன் மீண்டும் ஒரு பதிவு போட்டிருக்கிறார். அதில் அவர், பண்புள்ள சீனா, இனிய வணக்கம். மாமனிதனை இம்மண்னின் மனிதர்கள் கொண்டாடுகிறார்களா அல்லது ஏற்றுக்கொள்ளாமல் விட்டுவிட்டார்களா என்பது சில தினங்களில் தெரிந்துவிடும். அன்பிற்கு நன்றி. குறிப்பு: தனிப்பட்ட மடலில் யாரையும் Tag செய்து துணைக்கு அழைப்பதில்லை. என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full