நேற்று காதல் கொண்டேன் படத்தை பார்த்துவிட்டு ரசிகர் போட்ட பதிவு – புரிந்துகொள்ளாமல் செல்வராகவன் அளித்த பதில்

0
648
Selvaragavan
- Advertisement -

ரசிகரின் ட்வீட்டை தவறாக புரிந்து கொண்டு இயக்குனர் செல்வராகவன் அளித்திருக்கும் பதில் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான படைப்புகளை கொடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர் தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஆனார். இவர் இயக்கிய முதல் படமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

-விளம்பரம்-

அதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. மேலும், இவர் இயக்குவதும் மட்டும் இல்லாமல் படங்களில் நடித்தும் வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளிவந்த படம் பீஸ்ட். இந்த படத்தில் இவரின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து செல்வராகவன் நடித்த சாணி காகிதம் படம் சமீபத்தில் வெளியாகி இருந்தது. காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து இருந்தார்.

- Advertisement -

செல்வராகவன் திரைப்பயணம்:

இதனைத் தொடர்ந்து இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் நானே வருகிறேன் என்ற படம் வெளியாகி இருக்கிறது . இந்த படத்தில் தனுஷ் இரட்டை வேடத்தில் நடிக்கிறார். பல எதிர்பார்ப்புடன் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றியடையவில்லை. கலவையான விமர்சனத்தை தான் பெற்றிருந்தது. அதன் பின் மோகன் ஜி இயக்கத்தில் செல்வராகவன் அவர்கள் பகாசுரன் என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

செல்வராகவன் நடிக்கும் படங்கள்:

இந்த படத்தில் நடராஜ், சி ராஜன், மன்சூர் அலி கான், தர்க்ஷ என பலர் நடித்து இருந்தார்கள். இப்படம் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை மையமாக கொண்ட கதை. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து தற்போது செல்வராகவன் விஷாலுடன் மார்க் ஆண்டனி என்ற படத்தில் முக்கிய இடத்தில் நடித்து வருகிறார். இப்படி இயக்குவது மட்டுமில்லாமல் சமீப காலமாகவே செல்வராகவன் நடிகராக களம் இறங்கி இருக்கிறார்.

-விளம்பரம்-

ரசிகர் போட்ட டீவ்ட்:

இந்த நிலையில் ரசிகர்களுடன் செல்வராகவன் கலந்துரையாடி இருக்கிறார். அப்போது ரசிகர் ஒருவர் நேற்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான செல்வராகவனின் காதல் கொண்டேன் படம் குறித்து டீவ்ட் போட்டு இருந்தார். அதில் அவர், விவேக் ஒரு காமெடியில் சொல்வார். இயக்குநர் ஒவ்வொரு ஃப்ரேமையும் செதுக்கியிருக்கிறார். அப்படி ஒரு படம் என்று பதிவிட்டு இருந்தார். இப்படி ரசிகர் போட்ட டீவ்ட்டில் செதுக்கி இருக்கிறார் என்பதற்கு பதிலாக செத்து இருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

செல்வராகவன் பதில் டீவ்ட்:

இதை பார்த்த செல்வராகவன், ஏன் நண்பா.. நான் சாகவும் இல்லை, ஓய்வை அறிவிக்கவும் இல்லை. நான் தற்போது எனக்காக சில நேரங்களில் செலவழித்து வருகிறேன். நான் 40 களில் இருக்கிறேன். விரைவில் திரும்ப வருவேன் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இதை அடுத்து நெட்டிசன்கள் செல்வராகவனுக்கு ரசிகர் செய்த தவறை சுட்டிக்காட்டி பதிவிட்டு இருக்கின்றனர்.

Advertisement