அட, செல்வராகவனின் இரண்டாம் மனைவி இந்த பிரபல நடிகையின் உறவினர் தானா. பாத்தா ஷாக்காவீங்க.

0
667
selva
- Advertisement -

இயக்குனர் செல்வராகவன், தமிழ் சினிமாவில் இருக்கும் இயக்குனர்களில் வித்தியாசமான கதைகளை எடுக்கும் ஒரு சிலரில் இவரும் ஒருவர். ஆரம்ப காலத்தில் எழுத்தாளராக இருந்த இவர், தனுஷ் அறிமுகமான துள்ளுவதோ இளமை என்ற படத்தில் கதை ஆசிரியர் பணியாற்றினார்.அதன் பின்னர் தனுஷை வைத்து 2003 ஆம் ஆண்டு ‘காதல் கொண்டேன்’ படத்தை இயக்கினார் இந்த படம் தனுஷுக்கு ஒரு மிகப்பெரிய துவக்கத்தை கொடுத்தது.

அதன் பின்னர் இவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன போன்ற பல படங்கள் மாபெரும் வெற்றி அடைந்தது. இய்குனார் செல்வராகவன் கடந்த 2006 ஆம் ஆண்டு சோனியா அகர்வாலை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களது திருமண வாழ்க்கை 2010 வரை மட்டுமே நீடித்தது. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பரஸ்பரம் பேசி விவகாரத்து பெற்றுக்கொண்டனர்.

- Advertisement -

இவருக்குஇருந்த குடிப்பழக்கத்தால் தான் இவரை செல்வராகவன் பிரிந்துவிட்டார் என்றும் கூறப்பட்டது. இதையடுத்து இயக்குனர் செல்வராகவன் கடந்த 2011 ஆம் ஆண்டு கீதாஞ்சலி ராமன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் செல்வராகவன் இயக்கிய மயக்கம் என்ன படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

This image has an empty alt attribute; its file name is barandbench%2Fimport%2F2013%2F02%2FPS-Raman-FINAL-Pic_0.jpg
கீதாஞ்சலி தந்தை எஸ் பி ராமன்

மேலும், இவர் பிரபல நடிகை வித்யூ லேகாவின் சகோதரியும் ஆவார். அட ஆமாங்க பிரபல காமெடி நடிகை வித்யூ லேகா ராமனின் தந்தையும் நடிகருமான மோகன் ராமனின் சகோதரர் பி எஸ் ராமனின் மகள் தான் செல்வராகவனின் இரண்டாம் மனைவியான கீதாஞ்சலி ராமன் என்பது பலரும் அறிந்திடாத ஒன்று. சமீபத்தில் இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றும் வெளியாகி இருக்கிறது.

-விளம்பரம்-
Advertisement