சத்தமே இல்லாமல் நிச்சயத்தை முடித்த செம்பருத்தி சீரியல் நடிகர் – இவங்க தான் பொண்ணு.

0
4098
kathir
- Advertisement -

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் டாப் சீரியல்களில் செம்பருத்தி ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். இந்த தொடர் தெலுங்கு மொழியில் வந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல். இந்த செம்பருத்தி தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும் நடிக்கிறார்கள். அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரபலமான நடிகை பிரியா நடிக்கிறார். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. மேலும், ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இருந்தாலும் இந்த சீரியலுக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.

-விளம்பரம்-

கொரானா காரணமாக அனைத்து சீரியலின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டிருந்தது. பின் மீண்டும் கடந்த ஜூன் 5-ஆம் தேதி முதல் 60 பேருடன் சின்னத்திரை படப்பிடிப்பை தொடங்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து சின்னத்திரை படப்பிடிப்பு பணிகள் எல்லாம் நடைபெற்றது. மேலும், கொரோனா பரவல் அதிகம் என்பதால் மீண்டும் ஜூன் 19-ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

- Advertisement -

எப்போது சின்னத்திரை படப்பிடிப்பு தொடங்கி சீரியல்கள் வெளிவரும் என்று மக்கள் அனைவரும் வருத்தத்தில் உள்ளார்கள். மேலும், ஜீ தமிழில் செம்பருத்தி சீரியலில் பழைய எபிசோடுகள் மீண்டும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த தொடரில் ஆதியின் தம்பியாக நடித்து வரும் கதிருக்கு தற்போது நிச்சயதார்த்தம் முடிந்து உள்ளது. கொரோனா என்பதால் சத்தமே இல்லாமல் தன்னுடைய நிச்சயதார்த்தம் செய்துள்ளார் நடிகர் கதிர். இவர் தன்னுடைய வருங்கால மனைவியுடன் எடுத்து கொண்ட போட்டோவை சோசியல் மீடியாவில் பகிர்ந்து உள்ளார். போட்டோ பதிவிட்டு அதில் அவர் கூறியிருப்பது, எனக்கு நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டது. லாக்டவுன் காரணமாக நிறைய பேரை அழைக்க முடியாமல் போனது. என்னை மன்னித்துவிடுங்கள்.

லாக்டவுன் நேரத்தில் இ-பாஸ் பிரச்சினைகள் காரணமாக தான் நிறைய பேரை அழைக்க முடியவில்லை. கல்யாணத்திற்கு நிச்சயம் அனைவரையும் அழைப்பேன். எல்லோரும் கண்டிப்பாக வந்து எனக்கு வாழ்த்துக் கூறுங்கள். உங்களுடைய அனைவரது வாழ்த்துகளையும் பெற நான் காத்திருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். இவரின் திருமண நிச்சயதார்த்தம் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். இவர் சீரியல் நடிகர் மட்டுமில்லாமல் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement