அடேங்கப்பா, ‘செம்பருத்தி’ வனஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா ? ஹீரோ ரேஞ்ல இருக்காரே.

0
1388
vanaja
- Advertisement -

செம்பருத்தி சீரியல் வனஜாவுக்கு இவ்வளவு பெரிய மகனா! சோசியல் மீடியாவில் வைரலாகும் புகைப்படம். இதற்கு ரசிகர்கள் பலரும் பல்வேறு கமெண்ட் போட்டு வருகிறார்கள். ஜீ தமிழ் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக நான்கு ஆண்டுகளுக்கு மேல் கடந்து ஒளிபரப்பாகி வரும் சீரியல் செம்பருத்தி சீரியல். இந்த சீரியல் தொடங்கியதில் இருந்து இப்போது வரை மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வருகிறது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை கொண்ட தொடர். அதுமட்டுமில்லாமல் இந்த சீரியல் தெலுங்கு மொழியில் வெளிவந்த முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த தொடரின் ஆரம்பத்தில் ஆதி கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

பின் சில காரணங்களால் இவர் சீரியல் இருந்து விலகி விட்டார். இவருக்கு பதில் அக்னி இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், பார்வதி கதாபாத்திரத்தில் சபானா நடித்து வருகிறார். அகிலாண்டேஸ்வரி கதாபாத்திரத்தில் பிரியா ராமன் நடித்து வருகிறார். மேலும், இந்த தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கின்றது. மேலும், இந்த சீரியலின் வெற்றிக்கு முக்கியமானவர்களுள் ஒருவர் வனஜா.

- Advertisement -

லக்ஷ்மி திரைப்பயணம்:

அதுமட்டும் இல்லாமல் ஹீரோ, ஹீரோயினிக்கு இணையாக இந்த சீரியலில் அதிகம் பேசப்படும் கதாபாத்திரம் வனஜா தான். இவருடைய காமெடி தனமான வில்லி கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. வில்லி வனஜா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை லட்சுமி. இவர் சென்னையில் பிறந்தவர். 2003 ஆம் ஆண்டு முதல் இவர் மீடியாவிற்குள் இருக்கிறார். இவர் சினிமா, சீரியல் என்று இரண்டு துறைகளிலும் நடித்திருக்கிறார். மேலும், இயக்குநர் கே பாலச்சந்தர் அறிமுகப்படுத்திய பல பிரபலங்களுள் லட்சுமியும் ஒருவர்.

செம்பருத்தி வனஜா :

லக்ஷ்மி முதன் முதலாக நடித்த படம் பார்த்தாலே பரவசம். பின் இவர் பல நடிகர்களுடன் படங்களில் நடித்திருக்கிறார். சினிமாவில் வாய்ப்பு குறைந்த உடன் லட்சுமி சின்னத்திரை பக்கம் வந்து விட்டார். சின்னத்திரையிலும் இவர் பல தொடர்களில் நடித்து இருக்கிறார். மேலும், இவர் பல சீரியல்களில் காமெடி, வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தாலும் செம்பருத்தி சீரியலில் மூலம் தான் இவருடைய கதாபாத்திரம் அதிகமாக பேசப்பட்டு வருகிறது. இப்படி சினிமா, குடும்பத்தையும் பேலன்ஸ் செய்து கொண்டு இருக்கிறார்.

-விளம்பரம்-

லட்சுமி பதிவிட்ட பிறந்தநாள் வாழ்த்து:

லக்ஷ்மிக்கு திருமணமாகி மோகன் விராட் என்ற மகன் உள்ளார். இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பார். சூட்டிங் இல்லாத நேரங்களில் ஷாப்பிங் செல்வது, புதுப்புது வித்தியாசமாக வீடியோக்களை பதிவிதுவதை வழக்கமாக வைத்துள்ளார். இந்நிலையில் லக்ஷ்மி தன் மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். சமீபத்தில் தான் லட்சுமி தனது மகனின் பிறந்தநாளை ஒட்டி மகனுடன் கோவிலுக்கு சென்றிருந்தார். அப்போது எடுத்த புகைப்படங்களை சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருக்கிறார். அந்த பதிவில் லட்சுமி கூறியிருப்பது,

வைரலாகும் லக்ஷ்மி மகனின் புகைப்படம்:

பிறந்தநாள் வாழ்த்துக்கள் என் செல்ல குட்டி மோஹி. உனக்கு தாயாகவே நான் பிறந்தேன். வாழ்க்கை இத்தனை அழகு என்பதை நீ பிறந்த போது உன் கண்களில் கண்டேன். வாழ்க்கை எத்தனை அர்த்தம் இருந்தது என்பதை உன்னோடு வளர்கையில் உணர்ந்தேன். நன்றிடா என் மகனே. என் தாயுமானவன் என்று பதிவிட்டிருந்தார். இவருடைய பதிவு சோசியல் மீடியாவில் வைரலானது. இதை பார்த்து பலரும் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா! நம்பவே முடியவில்லை. இவ்வளவு இளமையாக இருக்கிறீர்களே! என்றும், நீங்கள் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தாலும் உங்க மகன் ஹீரோ போல் இருக்கிறார். உங்கள் மகனை ஹீரோவாக பார்க்க ஆசைப்படுகிறோம் என்றும் கமெண்ட் போட்டு இருக்கின்றார்கள்.

Advertisement