செம்பருத்தி சீரியலில் மீண்டும் என்ட்ரி கொடுக்கும் கார்த்தி – ரசிகர்கள் செம குஷி.

0
1431
karthi
- Advertisement -

பொதுவாகவே வெள்ளித்திரை படங்களைவிட சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் தான் தமிழக மக்கள் மத்தியில் மிக நெருக்கமான ஒன்றாக உள்ளது. எப்போதும் மக்களின் அன்றாட பொழுதுபோக்கு அம்சமாக சீரியல்கள் திகழ்கின்றன. இதனால் ஒவ்வொரு சேனலும் தங்கள் சேனல் டிஆர்பி ரேட்டிங்காக புது புது வித்தியாசத்துடன் பல தொடர்களை ஒளிபரப்பி செய்து வருகிறார்கள். அந்த வகையில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் ஒன்று தான் செம்பருத்தி.

-விளம்பரம்-
கோயிலில் சிம்பிளாக நடந்த செம்பருத்தி சீரியல் நடிகையின் திருமணம் - வைரலாகும்  திருமண புகைப்படம்.! - Kalakkal Cinema

இந்த சீரியல் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த சீரியலில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக் ராஜ் நடித்தார். பின் சமீபத்தில் சில காரணங்களால் இவர் சீரியலில் இருந்து விலகினார். தற்போது ஆதி கதாபாத்திரத்தில் அக்னி நடித்து வருகிறார். மேலும், பார்வதி கதாபாத்திரத்தில் ஷபானா நடித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல் இந்த சீரியலில் கார்த்திக் ராஜ் மற்றும் சபானா ஜோடிக்கு என்றே ஒரு தனி ரசிகர் படை உள்ளது.

இதையும் பாருங்க : ஆமா, இந்த கதாபாத்திரத்தை அவர குறிப்பிட்டு தான் வேணுன்னு வச்சி இருக்கேன் – தைரியமாக சொன்ன மோகன்

- Advertisement -

கார்த்திக் சீரியலில் இருந்து வெளியேறியதால் பலரும் வருத்தத்தை தெரிவித்து இருந்தார்கள். அதில் இருந்தே சீரியல் கொஞ்சம் டல்லாக போய்க்கொண்டிருக்கின்றது. அதோடு சீரியலில் இருந்த பழைய விறுவிறுப்பும் சுறுசுறுப்பும் தற்போது இல்லை என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது செம்பருத்தி சீரியல் குறித்து ஒரு புதிய நற்செய்தி வெளியாகி உள்ளது. அது என்ன விஷயம் என்றால் கார்த்திக் ராஜ்ஜை மீண்டும் ஜீ தமிழில் பார்க்கலாம்.

Sembaruthi Serial Actor Karthi Shares About His Weired Fan Moment

எப்படி என்றால் வரும் திங்கட்கிழமை அக்டோபர் 4ஆம் தேதியில் இருந்து செம்பருத்தி சீரியலின் முதல் எபிசோட் இலிருந்து மீண்டும் ஜீ தமிழில் ஒளிபரப்பு செய்ய இருக்கிறார்கள். காலை 8 மணி முதல் 9.30 மணி வரை செம்பருத்தி சீரியல் மீண்டும் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதை பார்த்த செம்பருத்தி சீரியல் ரசிகர்கள் கார்த்திக் ராஜ் மீண்டும் சீரியலில் நடித்தால் சீரியல் சூடு பிடிக்கும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

-விளம்பரம்-
Advertisement