செம்பருத்தி சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்த கொண்டாட்டம். இதோ வீடியோ.

0
2396
sembaruthi
- Advertisement -

கொரோனா பிரச்சனை காரணமாக சினிமா மற்றும் சின்னத்திரை படப்பிடிப்புகள் எல்லாம் ரத்தாகி இருந்தது. இருப்பினும் இடையில் சினிமாவின் போஸ்ட ப்ரொடக்சன் பணிகள் மட்டும் அனுமதிப்பட்டிருந்த நிலையில் சின்னத்திரை தொடர்களை பல கட்டுப்பாடுகளுடன் 60 பேர் மட்டும் நடத்திக்கொள்ளலாம் என்று அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. இதனால் சின்னத்திரை ஷூட்டிங் அனைத்தும் துவங்கப்பட்டது.

-விளம்பரம்-

ஆனால், சென்னையில் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமானதால் மீண்டும் சின்னத்திரை படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டது. சினிமா ஷூட்டிங் இல்லாததால் தற்போது ரிலீஸ் ஆக இருந்த படங்கள் அனைத்தும் OTTயில் வருகிறது.இப்படி ஒரு நிலையில் ஒரு சில கட்டுப்பாடுகளுடன் சின்னத்திரை சீரியல்கள் மீண்டும் துவங்கப்பட்டது.

- Advertisement -

அந்த வகையில் ஜீ தொலைக்காட்சயில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி சீரியலின் படபிடிப்புகளும் துவங்கப்பட்டது. இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஒளிபரப்பப்பட்டது. இந்த சீரியல் முழுக்க முழுக்க காதல் பின்னணியை மையமாக கொண்ட தொடர். இந்த தொடர் தெலுங்கு மொழியில் ஒளிபரப்பான முத்த மந்தாரம் என்ற தொடரின் தழுவல்.

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பார்க்கின்ற தொடராக செம்பருத்தி உள்ளது. இந்நிலையில் ஜீ டிவியில் ஒளிபரப்பாகி வரும் செம்பருத்தி தொடரின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. ஷூட்டிங் ஆரம்பித்த முதல்நாளிலேயே அத்தொடரின் இயக்குநர் ரவி பாண்டியனுக்கு பிறந்தநாள் என்பதால் செம்பருத்தி சீரியல் குழுவினர் ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.

-விளம்பரம்-
Advertisement