இனி நான் தான் செம்பருத்தி சீரியலில் கார்த்தி – பிரபல யூடுயூப் சேனல் தொகுப்பாளர் வெளியிட்ட வீடியோ. இவரும் நல்லா தான் இருக்காரு.

0
4547
karthi
- Advertisement -

செம்பருத்தி சீரியலில் இருந்து கார்த்திக் விலகியதை அடுத்து தற்போது அடுத்த கார்த்தியாக நடிக்கப்போவது யார் என்பது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு சீரியல்கள் இல்லத்தரசிகள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விடுகிறது. அந்த வகையில் மக்களிடையே அதிக ஆதரவும்,அன்பும் பெற்ற சீரியல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியல் தான். இப்போது இருக்கும் டாப் சீரியல்களில் செம்பருத்தி சீரியலும் ஒன்று. இந்த சீரியல் 2017 ஆம் ஆண்டு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. இந்த தொடரில் ஆதித்யா என்ற கதாபாத்திரத்தில் கார்த்திக்கும், பார்வதி என்ற கதாபாத்திரத்தில் சபானாவும், அவருக்கு ஜோடியாக ஆபிஸ் புகழ் கார்த்தியும் நடித்தனர்.

-விளம்பரம்-

இப்படி ஒரு நிலையில் இந்த சீரியலில் இருந்து கார்த்தி மாற்றப்பட இருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஜீ தமிழ் தொலைக்காட்சி அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது. அதில், இந்த தொடரை ஒரு மாபெரும் வெற்றி தொடராக மாற்றிய அனைத்து ரசிகர்களுக்கும் நன்றி அதேபோல் இந்த சீரியல் இந்த அளவிற்கு வெற்றி பெறுவதற்கு காரணமாக இருந்த கார்த்திக்கும் எங்கள் பாராட்டுக்கள் ஆனால் இந்த தொடரில் இருந்து ஒரு சில எதிர்பாராத காரணங்களுக்காக கார்த்திக் மாற்றப்பட்டு இருக்கிறார். ஜீதமிழ் உடனான அவரது தொடர்பு மேலும் நீடிக்கும் அவரது பயணத்திற்கு எங்களுடைய வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டு இருந்தது.

இதையும் பாருங்க : சித்ராவை வீடியோ எடுத்து மிரட்டியுள்ள ரக்‌ஷன் ? – வெளியான அதிர்ச்சி தகவல்.

- Advertisement -

கார்த்தி விலகியதை அடுத்து செம்பருத்தி சீரியல் அடுத்ததாக கார்த்தியாக நடிக்கப் போவது யார் என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி இருந்தது. அதில் தற்போது குக்கூ வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்குபெற்ற வரும் நடிகர் அஸ்வின் நடிக்க இருப்பதாக கூட தகவல்கள் வெளியாகி இருந்தது. இப்படி ஒரு நிலையில் செம்பருத்தி தொடரில் கார்த்தியாக பிரபல தனியார் யூடியூப் சேனலின் தொகுப்பாளராக பணிபுரிந்து வரும் விஜே அக்னி என்பவர் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. அதனை உறுதி செய்யும் விதமாக விஜே அக்னியும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அந்த வீடியோவில் பேசியுள்ள அவர், ஜீ தமிழ் சானலில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி சீரியலில் நான் லீட் ரோலான அதி – ஆதிக்கடவூர் ஆதித்யாவாக நான் வருகிறேன். ஏற்கனவே கார்த்திக் ராஜ் மிக சிறப்பாக பண்ணிட்டு இருந்த ஒரு கேரக்டர். Destiny அதை என்னிடம் கொண்டு வந்திருக்கிறது. இந்த ப்ராஜெக்ட் மூலமாக எனக்கு மிகப்பெரிய பொறுப்பு இருக்கிறது என உணர்கிறேன். ஏனென்றால் இது நான் நன்றாக யோசித்து எடுத்த ஒரு முடிவு தான். அதே சமயம் என் இந்த முடிவு வெற்றி தரும் என நம்பிக்கை உள்ளது. என்னை உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement