தனக்கு முன்பாக தனது மகனின் திருமணம் குறித்து உளறி கொட்டிய செந்தில் – தம்பி ராமய்யாவின் Reaction

0
1695
Senthi
- Advertisement -

அர்ஜுன் மகளுக்கும் தம்பி ராமைய்யா மகனுக்கு நடைபெற இருக்கும் திருமணம் குறித்து பேட்டியில் உளறி இருக்கிறார் செந்தில். கோலிவுட்டில் பல ஆண்டு காலமாக பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருப்பவர் ஆக்சன் கிங் அர்ஜுன். இவர் 90 கால கட்டம் தொடங்கி இன்று வரை படங்களில் நடித்து கொண்டு இருக்கிறார். பெரும்பாலும் இவர் ஆக்ஷன் படங்களில் தான் நடித்து வருகிறார். இவர் படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இவர் நடிகர் மட்டுமில்லாமல் இயக்குனர், தயாரிப்பாளர், கதை ஆசிரியர், பட விநியோகம் என பன்முகம் கொண்டு திகழ்கிறார்.

-விளம்பரம்-

நடிகர் அர்ஜுன் அவர்கள் 1988 ஆம் ஆண்டு நிவேதிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஐஸ்வர்யா மற்றும் அஞ்சனா என்று இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். இவரது மூத்த மகள் ஐஸ்வர்யா தமிழில் விஷால் நடிப்பில் வெளியான ‘பட்டது யானை’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக சினிமாவிற்கு அறிமுகமானார்.அதன் பின்னர் அர்ஜுன் இயக்கிய தெலுங்கு படத்திலும் நடித்தார்.

- Advertisement -

இருந்தாலும், இவர் தன் தந்தையை போல் சினிமாவில் இடம் பிடிக்க முடியாமல் தவிக்கிறார். இருந்தாலும், ஐஸ்வர்யா சினிமாவில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பிரபல காமெடி நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை கடந்த சில வருடங்களாக காதலித்து வருகிறார் என்ற செய்தி இணையத்தில் வைரலாகி இருக்கிறது. நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியும் சில படங்களில் நாயகனாக நடித்திருக்கிறார்.

உமாபதி- ஐஸ்வர்யா திருமணம்:

அது மட்டும் இல்லாமல் திரைக்கு வர இருக்கும் ராஜகிளி என்ற படத்தையும் அவர் இயக்கியிருக்கிறார். அதோடு ஜீ தமிழில் ஒளிபரப்பான சர்வைவர் என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் உமாபதி பங்கேற்றிருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் உமாபதிக்கும் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யாவுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக சொல்லப்படுகிறது. பல மாதங்களாக இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது.இவர்களுடைய காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்ததால் கூடிய விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

-விளம்பரம்-

உறுதி செய்த செந்தில் :

இந்த நிலையில் தம்பி ராமைய்யா விரைவில் அர்ஜுனுக்கு சம்மந்தி ஆக போகிறார் என்று செந்தில் உளறி இருக்கிறார். தம்பி ராமைய்யா மற்றும் செந்தில் ஆகிய இருவரும் சந்தானம் நடித்துள்ள கிக் படத்தில் நடித்துள்ளார்கள். சமீபத்தில் இந்த படத்திற்கான பேட்டி ஒன்றில் பேசிய செந்தில் ‘தம்பி ராமையா ஒரு தயாரிப்பாளர் மிகவும் சிறந்த ரைட்டர் அவருடைய பையன் நடிகர் மற்றும் இயக்குனர்.

அவருடைய இயக்கத்தில் விரைவில் ஒரு படம் வரப்போகிறது. அவருக்கு கூட கல்யாணம் ஆகப்போகிறது. ஆனால், பொண்ணு யார் என்பது சஸ்பென்சாக இருக்கிறது.பரவால்ல நான் சொல்லி விடுகிறேன் நடிகர் அர்ஜுன் மகள் தான் அனைவருமே கலை குடும்பம் தான். வாழ்த்துக்கள் என்று கூறியதும் அருகில் இருந்த தம்பி ராமய்யா செந்திலின் காலை தொட்டு வணங்கினார். இப்படி தம்பி ராமய்யாவிற்கு முன்பாகவே அவரது மகனின் திருமணத்தை பற்றி போட்டுடைத்து விட்டார் செந்தில்.

Advertisement