விஸ்வாசம் படத்தின் இரண்டாவது பாடல்..!வெளியான மாஸ் தகவல்..!
அல்டிமேட் ஸ்டார் அஜித் தற்போது சிவா இயக்கத்தில் ‘விஸ்வாசம்’ படத்தில் நடித்து வருகிறார். அடுத்த 2019 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ள இந்த படத்தின் அப்டேட்டிற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. படத்தை வருகிற பொங்கல் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான 'தூக்கு துரை ' பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் இந்த படத்தில் இருந்து இரண்டாவது பாடலும் விரைவில் வே;வெளியாகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்க்கனோக்கி வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டாவது பாடலை செந்தில் கணேஷ் பாடியுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் டிவியில் நடத்தப்பட்டு வந்த சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியின் பிரம்மாண்ட இரு இறுதி போட்டியில் படத்தை வென்றவர்கள் தான் செந்தில் கணேஷ் ராஜ லட்சுமி. தற்போது இவர்களுக்கு தொடர்ந்து சினிமாவில் படும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. அது போக செந்தில் கணேஷ் ஹீரோவாகவும் அவதாரம் எடுத்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.