தங்கும் வீட்டிற்கு வந்த பிரச்சனை.! பல லட்சம் இழந்து நடுத்தெருவில் புலம்பிய சன் டிவி நடிகர்.!

0
1361
Birla-bose
- Advertisement -

சன் டிவியில் ஒளிபரப்பான கோலங்கள், திருமதி செல்வம், பந்தம் உட்பட பல சீரியல்களில் நடித்தவர் நடிகர் பிர்லா போஸ். மேலும், இவர் ‘தனி ஒருவன்’, ‘துப்பறிவாளன்’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

-விளம்பரம்-

நடிகர் பிர்லா போஸ். சமீபமாக நடந்து முடிந்த சின்னத்திரை நடிகர் சங்கத் தேர்தலில் நிரோஷா தலைமையிலான அணியில் போட்டியிட்டு வெற்றி பெற்று தற்போதைய சங்கத்தில் செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இவர் தன் வீட்டு உரிமையாளர் மீது கமிஷனர் ஆபீஸில் புகார் கொடுத்துள்ளார். 

- Advertisement -

இதுகுறித்து அவர் அளித்துள்ள புகாரில், நான் மதுரவாயல் பகுதியில் ஐந்து ஆண்டுகளாக வசித்து வருகிறேன். இந்த வீட்டை பாலாஜி என்பவரிடம் குத்தகைக்கு வங்கியிருந்தேன். ஒருநாள், வங்கியில் இருந்து வந்து இந்த வீடு ஜப்தியில் உள்ளது. உடனே காலி செய்ய வேண்டும் என்று கூறினர். எனக்கு எதுவும் புரியவில்லை.


இந்த வீட்டின் உரிமையாளர் ஆறுமுகம் என்பவர் என்று தெரிய வந்தபோதுதான் நான் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்று தெரியவந்தது. 500 சதுர மட்டும் கொண்ட இந்த
வீட்டை 920 சதுர அடி என்று கணக்கு காட்டி வங்கியில் லோன் வாங்கியிருக்கிறார்கள். தற்போது வீட்டை காலி செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். என்னை ஏமாற்றிய பாலாஜி, ஆறுமுகம் மற்றும் அந்த வங்கி மீதும் நடவடிக்கை எடுக்குமாறும் என் குடும்பத்துக்கும் வீட்டுக்கும் எந்தவித தொந்தரவு ஏற்படாதவாறு நடவடிக்கை எடுத்து நியாயத்தை வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement