சீரியல் நடிகர் சித்து ஹீரோவாக களமிறங்கி இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரையில் மிகப் பிரபலமான ஜோடிகளாக திகழ்பவர்கள் சித்து- ஸ்ரேயா. பிரபலமான தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘திருமணம்’ என்ற சீரியல் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. இந்த தொடர் மூலம் கதாநாயகனாக சின்னத்திரையில் அறிமுகமானவர் சித்து. அதே தொடரில் கதாநாயகியாக நடித்தவர் ஸ்ரேயா. இந்த சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே இவர்கள் இருவரும் காதலித்து வந்தார்கள்.

அதனை தொடர்ந்து நீண்ட நாட்களாக காதல் பறவைகளாக வலம் வந்த இவர்கள் கடந்த 2021 ஆம் ஆண்டு இறுதியில் தான் திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் திருமணம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் கோலாகலமாக நடந்து முடிந்தது. இவர்களின் திருமண புகைப்படங்களும், வீடியோக்களும் சோசியல் மீடியாவில் வெளியாகி இருந்தது. அதைப் பார்த்து ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் இவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தார்கள்.
சித்து- ஸ்ரேயா திரைப்பயணம்:
மேலும், நடிகர் சித்து ‘திருமணம்’ சீரியலை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் நடித்திருந்தார். அதே போல் நடிகை ஸ்ரேயாவும் விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘அன்புடன் குஷி’ என்னும் சீரியலில் நடித்திருந்தார். அதற்குப் பிறகு ஸ்ரேயா, ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ரஜினி என்னும் சீரியலில் நடித்திருந்தார். இவர்கள் நடித்த அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சித்து-ஸ்ரேயா சீரியல்கள்:
அதன் பின் இவர்கள் இருவரும் சேர்ந்து ஜீ தமிழில் கடந்த ஆண்டு ஒளிபரப்பான ‘வள்ளியின் வேலன்’ என்ற தொடரில் சேர்ந்து நடித்திருந்தார்கள். இந்த சீரியல் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது. பின் திடீரென்று சில மாதங்களுக்கு முன்பு தான் இந்த சீரியலை முடித்து விட்டார்கள். அதற்குப்பின் சித்து-ஸ்ரேயா இருவருமே எந்த சீரியலிலும் கமிட் கமிட் ஆகவில்லை. இருந்தாலும், இருவரும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்கள்.
View this post on Instagram
ஹீரோவான சித்து:
இப்படி இருக்கும் நிலையில் சித்து ஹீரோவாக நடிக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தற்போது ஹீரோவாக சித்து வெள்ளி திரையில் களமிறங்கி இருக்கிறார். இவர் The Dark Heaven என்ற படத்தில் தான் நடிக்கிறார். இந்த படத்தினுடைய பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியிருக்கிறது. நீண்ட நாட்களுக்கு பின் சித்துவின் கனவு நனவாகி இருக்கிறது. இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.






