விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் சீரியல் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலில் ஸ்டாலின், சுஜிதா, வெங்கட் ரங்கநாதன், ஹேமா ராஜ்குமார், சித்ரா, குமரன் தங்கராஜன், சரவணன், விக்ரம் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். இது அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதை. இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழிகளில் மொழி மாற்றம் செய்து ஒளிபரப்பு செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு பாப்புலர் ஆன சீரியல். இந்நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோரில் முதல் தம்பியாக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் தொகுப்பாளராக தான் சின்னத்திரையில் அறிமுகமானர். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் என்ற சீரியல் மூலம் தான் சீரியல் நடிகர் ஆனார்.

அதனை தொடர்ந்து புகுந்த வீடு, ஆண்பாவம், மாயா, தெய்வம் தந்த வீடு, அக்னி பறவை, மெல்ல திறந்தது கதவு, நினைக்க தெரிந்த மனமே போன்ற பல தொடர்களில் நடித்து உள்ளார். தற்போது இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மற்றும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா தொடர்களிலும் நடித்து வருகிறார். இது தவிர இவர் பல நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று உள்ளார். இவர் அஜந்தா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. இவருடைய பெண்ணின் பெயர் தேஜு. இந்நிலையில் இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் ஜீவா அவர்கள் மீனாவை காதலித்து திருமணம் செய்து கொள்வார்.

Advertisement

அதே போல் தான் தன்னுடைய நிஜ வாழ்க்கையிலும் வெங்கட் காதலித்து தான் திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய காதல் குறித்து வெங்கட் அவர்கள் பேட்டியில் கூறியது, நானும் என்னோட மனைவி அஜந்தாவும் கோயம்புத்தூரில் ஒரே காலேஜில் படித்தவர்கள். சொல்லப்போனால் நாங்கள் இரண்டு பேரும் கிளாஸ் மேட்ஸ். ஆரம்பத்தில் நாங்கள் நல்ல நண்பர்களாக இருந்தோம். ஒரே ஒரு விஷயத்தில் எனக்கு அப்படியே அவர்கள் நேர் எதிர். நான் தளபதி ரசிகன் அவங்க தல ரசிகை. இதை வைத்து தான் எங்கள் இரண்டு பேருக்கும் அடிக்கடி சண்டை வரும். சில நாட்கள் நாங்கள் இருவரும் பேசாமல் இருந்திருக்கிறோம். பின் எங்கள் மோதல் காதலில் முடிந்தது. நான் அவர்களுடன் சண்டை போட்டு நிறைய நாள் பேசாமல், பார்க்காமல் இருந்திருக்கிறேன்.

அப்போதெல்லாம் என் மனதுக்குள் பயங்கரமாக தவிப்பு இருக்கும். ஒரு கட்டத்துக்கு மேல் தனிமையாக இருக்கிற மாதிரி எனக்கு உணர்வு ஏற்படும். நான் உடனே போய் நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா? என்று அவர்களிடம் கேட்டேன். அவர்களும் சரி என்று சொல்லிவிட்டார். அடுத்த இரண்டு வருடமும் காதலர்களாகவே எங்களுடைய காலேஜ் வாழ்க்கை முடிந்தது. அதற்குப் பிறகு அவர் சொந்த ஊருக்கு போய் விட்டார். என்னை பார்க்க ஒவ்வொரு வீக்கும் கோயம்புத்தூர் வருவார்.

Advertisement

அந்த ரெண்டு வருஷம் கோயம்புத்தூரில் நாங்கள் சேர்ந்து இருந்து சுற்றாத இடமே இல்லை. மாத்தி மாத்தி நிறைய கிப்ட் கொடுத்து, ஊர் சுற்றி அப்படியே ஜாலியா போகும். அது எல்லாம் ஒரு அழகிய காலம். நாங்க முதன் முதலாக பார்த்த படத்தின் டிக்கெட் கூட பத்திரமாக வைத்து இருக்கிறோம். கல்யாணம் ஆனாலும் எங்களுடைய காதல் சற்றும் குறையவில்லை. எப்பயுமே நாங்கள் காதல் செய்து கொண்டே தான் இருப்போம் என்று புன்னகையுடன் பேசி முடித்தார் வெங்கட்.

Advertisement
Advertisement