சரவணன் மீனாட்சி தொடர் நடிகைக்கு ஏற்பட்ட கோர விபத்து..!வெளியான புகைப்படம்..!

0
682
Saravanan-meenatchi

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி என்ற தொடர் பல ஆண்டுகளாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுவரை மூன்று சீசன்களை கடந்துள்ள இந்த தொடரில் நடித்த காயத்ரி என்பவர் சமீபத்தில் விபத்து ஒன்றில் சிக்கியுள்ளார்.

Serial actress gayathri

விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி, ஜோடி போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். மேலும், சீரியல் நடிகர் யுவராஜுடன் திருமணம் செய்துகொண்டார். மேலும், கணவர் யுவராஜுடன் நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நடனம் ஆடியதன் மூலம் மிகவும் பிரபலமானவர் காயத்திரி.

தொடர்ந்து சீரியலில் நடித்து வரும் இவர் இரண்டு குழந்தைகளுக்கு தாய் ஆன பின்னரும் இவர் மிகவும் இளமையான நடிகை போல உள்ளதாக இவரை பலர் பாராட்டியும் உள்ளனர்.இந்நிலையில் இவர் ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருந்தது.

Gayathri

அந்த நிகழ்ச்சியின் நடன ரிகசலில் கலந்து கொள்வதற்காக சென்ற போது அவர் வந்த கார் எதிர்ப்பாராத விதமாக அவருக்கு விபத்து காரணமாக அவருக்கு கை எலும்பு முறிந்தது.கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த காயத்ரியின் புகைப்படத்தை அவரது கணவர் யுவராஜ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.