கணவர் ஏமாற்றியதால் தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீ. அவரின் மகள் தற்போது என்ன செய்கிறார் தெரியுமா ? வீடியோ இதோ.

By Rajkumar · 4/2/2020

கடந்த ஆண்டு இறுதியில் சீரியல் நடிகை ஜெயஸ்ரீக்கும் அவரது கணவர் நடிகர் ஈஸ்வருக்கும் இடையே நடந்த குடும்ப பிரச்சனை சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. நடிகை ஜெயஸ்ரீ அவர்கள் தன்னுடைய கணவர் ஈஸ்வர் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வரும் மகாலட்சுமி என்பவருடன் கள்ளத் தொடர்பில் உள்ளார் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்து இருந்தார். இதனால் ஜெயஸ்ரீ கணவர் ஈஸ்வரை போலீசார் கைது செய்து விசாரித்து இருந்தது. பின்னர் ஈஸ்வர், மகாலட்சுமி, ஜெயஸ்ரீ ஆகிய மூவரும் மாத்தி மாத்தி ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி பேட்டி அளித்து வந்து உள்ளார்கள்.

நடிகை ஜெயஸ்ரீக்கு ஏற்கனவே முதல் திருமணம் செய்து விவாகரத்து ஆன நிலையில் தனது 8 வயது பெண் குழந்தையுடன் தான் இவர் நடிகர் ஈஸ்வர் ரகுநாத்தை திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘தேவதையை கண்டேன் ‘ என்ற சீரியலில் ஈஸ்வரும், மகாலட்சுமியும் நடித்து இருந்தார்கள். இவர்களின் குடும்ப பிரச்சனையால் சீரியலையே நிறுத்தி விட்டார்கள். இது அனைவருக்கும் தெரிந்ததே. பின் தன் கணவனின் டார்சல் தங்கள் முடியாமல் நடிகை ஜெயஸ்ரீ தூக்க மாத்திரை விழுங்கி தற்கொலைக்கு முயன்று இருந்தார்.

இதையும் பாருங்க : கோரோனா வைரஸ் வந்துடுச்சா ? கீர்த்தி சுரேஷின் தற்போதைய புகைப்படத்தை கண்டு ஷாக்கான ரசிகர்கள்.

இந்த நிலையில் இவருடைய நண்பர்களால் ஜெயஸ்ரீ மீட்கப்பட்டு ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த சம்பவம் சின்னத்திரை நடிகர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு தற்கொலைக்கு காரணம் ஈஸ்வரன் தன்னை மிரட்டினார் என்று பேட்டியில் கூறியிருந்தார். தற்போது நடிகை ஜெயஸ்ரீ அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக குணமடைந்து வருகிறார் என்று நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது. இவ்வளவு பிரச்சனைகளுக்கு நடுவில் நடிகை ஜெயஸ்ரீ மகள் என்ன ஆனார்? என்று பலரும் யோசிக்கவில்லை.

https://twitter.com/vijaytelevision/status/1224565748246491138

இந்த சிறு வயதில் அந்த குழந்தைக்கு இவ்வளவு பெரிய கஷ்டம் வந்திருக்கக் கூடாது என்றும் பலரும் கூறினர். இந்த நிலையில் நடிகை ஜெயஸ்ரீயின் வாழ்வில் ஒரு சந்தோஷமான நிகழ்வு ஏற்பட்டு உள்ளது. அது என்னவென்றால், நடிகை ஜெயஸ்ரீயின் மகள் ரேத்வா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் "பொம்முக்குட்டி அம்மாவுக்கு" என்ற புதிய சீரியலில் நடித்து வருகிறார். இதனால் ரசிகர்கள் அனைவரும் ஜெயஸ்ரீயின் மகளுக்கு சோசியல் மீடியாவில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

behindtalkies AMP · Quick view
View full