தென்னிந்திய சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்தில் முன்னணி நாயகியாக அவதாரம் எடுத்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழ் சினிமாவில் உள்ள பல முன்னணி நடிகர்களுடன் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்து உள்ளார். தற்போது கீர்த்தி சுரேஷ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக திகழ்ந்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என பல மொழி படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற பழம்பெரும் நாயகி சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்றை “மகாநதி” என்ற பெயரில் தெலுங்கில், “நடிகையர்-திலகம்” என்ற பெயரில் தமிழில் படமாக எடுத்தார்கள்.
இந்த படத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் சாவத்திரி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் மகாநதி (தமிழில் நடிகையர்-திலகம்) படத்திற்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது வாங்கினார். இந்த படத்தை தொடர்ந்து நடிகை கீர்த்தி சுரேஷ் அவர்கள் திரைப் படங்களின் கதைகளை மிகவும் கவனமாக தேர்வு செய்து நடிக்கிறார். தற்போது தலைவர் 168 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இதையும் பாருங்க : சீரியலுக்காக விஜய் படத்தின் வாய்ப்பை தவறுவிட்டுள்ள பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை.
கீர்த்தி சுரேஷ் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார் என்று பல கருத்துக்கள் சமூக வலைகளில் பரவியது. பொதுவாகவே நடிகைகளுக்கு பாலிவுட்டில் நடிப்பதை மிகப்பெரிய கனவாக வைத்திருப்பார்கள். அந்த கனவு குறுகிய காலத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ்க்கு கிடைத்தது. பாலிவுட்டில் நடிகர் அஜய் தேவ்கான் நடிக்கும் “மெய்டன்” என்ற படத்தின் மூலம் கீர்த்தி சுரேஷ் ஹிந்தியில் அறிமுகமாக இருந்தது. மேலும், இந்த படத்திற்காக உடல் எடையையும் குறைத்தார் கீர்த்தி சுரேஷ்.
ஆனால், கதாபாத்திரத்திற்கு தேவையானதைவிட உடல் எடையை கீர்த்தி சுரேஷ் குறைத்துவிட்டார் என்று பின்னர் நடிகை கீர்த்தி சுரேஷுக்குப் பதிலாக நடிகை பிரியாமணியை கமிட் செய்தனர். இந்த நிலையில் கீர்த்தி சுரேஷின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. அதில் கீர்த்தி சுரேஷ், முன்பைவிட ஒல்லியாக மாறி கண்ணங்கள் சுருங்கி இருப்பதை பார்த்த ரசிகர்கள் கீர்த்தி சுரேஷிற்கு கொரோனா வைரஸ் வந்துவிட்டதா என்று கிண்டல் செய்து வருகின்றனர்.