பிரபல சீரியல் நடிகை மாடியில் இருந்து விழுந்து மரணம்.! பின்னணி என்ன ?

0
1066
nikitha

சமீப காலமாக சீரியல் நடிகைகளின் மரண சம்பவம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பிரபல ஒடியா மொழி நடிகை நிகிதா மாடியில் இருந்து தவறி விழுந்து பலியான சம்பவம் ஓடியா சின்னத்திரை வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல ஒடியா மொழி நடிகை நிகிதா. இவரது உண்மையான பெயர் லட்சுமி பிரியா. 32 வயது ஆகிறது. நிகிதா நடித்த ‘சோரி சோரி மனா சோரி, மா ரா பனடாகனி’ உள்ளிட்ட படங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளின. அவருக்கு புகழையும் பெற்று தந்தன. அதிகமான டி.வி தொடர்களிலும் நடித்து வந்தார். 

- Advertisement -

லிபன் சாபு என்பவரை நிகிதா திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு கணவரை பிரிந்து அவர் தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகிறது. சில தினங்களுக்கு முன்பு பெற்றோர் வீட்டுக்கு சென்று இருந்தார். மாடியில் நின்றபோது திடீரென்று கீழே தவறி விழுந்தார். இதில் பலத்த அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். அவரது தலையிலும் காயம் ஏற்பட்டது. 

உடனடியாக நிகிதாவை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனாலும் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். இது அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஒடியா சினிமா மற்றும் டி.வி நடிகர்–நடிகைகளும் அதிர்ச்சியடைந்து உள்ளனர். 


-விளம்பரம்-
Advertisement