ஏன் ஆன்டி இதெல்லாம், உனக்கு என்ன ஹீரோயின் வாய்ப்பா கிடைக்க போது - கேலி செய்தவர்களுக்கு 45 வயது சீரியல் நடிகை கொடுத்த பதிலடி.

By Rajkumar · 16/7/2021

தமிழில் 1994 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி. இதை தொடர்ந்து தமிழில் சில படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ஆனால், இவர் அதிகம் தெலுங்கு மொழிப் படங்களில் தான் நடித்து உள்ளார். இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த அரண்மனைக்கிளி என்ற தொடரில் நடித்து வந்தார். அதே போல இவர் தமிழில் பல்வேறு படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் கூட நடித்துளளார்.

44 வயதாகும் இவர் தற்போதும் உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள பல்வேறு கடினமான உடற் பயிற்சிகளை செய்து வருகிறார். அதே போல சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் அடிக்கடி உடற் பயிற்சி வீடியோக்கள், நடன வீடியோக்கள் என்று பதிவிடுவது வழக்கம். சமீபத்தில் கூட பேலி நடனம் ஆடி அந்த வீடியோவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார்.

இதையும் பாருங்க : வீட்ல இந்த ரெண்டு நாள் நான் வெஜ் இல்லனு ரூல் போட்டாங்க, அதனால் நான். விஜய்யின் Thug மூமென்ட் வீடியோ.

சமீப காலமாக உடற் பயிற்சயில் தீவிரம் காட்டிவரும் இவர், சமீபத்தில் உடற் பயிற்சி செய்துவிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இதை பார்த்த பலரும் இந்த வயதிலும் இப்படி ஒரு பிட்னஸ்ஸா என்று பாராட்டிய நிலையில் நெட்டிசன்கள் சிலர் அதையும் கேலி செய்தனர். அப்படி ஒருவர், இவ்ளோ கஷ்டப்பட்டு உடற் பயிற்சி செய்தும் உடம்ப கொறஞ்ச பாடில்லை ஏன் என்று கமன்ட் செய்து இருந்தார்.

அதற்கு பதில் அளித்த பிரகதி, நான் உடம்பை குறைக்க உடற் பயிற்சி செய்யவில்லை, ஆரோக்கியமாகவும், வலிமையாக இருக்கவும் தான் செய்கிறேன் என்று கூறி இருந்தார். இன்னொருவர், இப்போ ஏன் இதெல்லாம் செய்கிறாய் ஆன்ட்டி. இப்படி செய்வதால் உனக்கு ஒன்னும் ஹீரோயின் வாய்ப்பு கிடைக்கப் போவதில்லை. அப்போவே Work Out பண்ணிருந்தா Sridevi மாதிரி வந்திருக்கலாம், இப்போ ஏன் பண்றீங்க என்று கமன்ட் செய்து இருந்தார். இதற்கு பதில் அளித்த பிரகதி, நான் ஹீரோயின் ஆக இதை பண்ணவில்லை. என் வயதுக்கும் இதற்கும் சம்மந்தம் இல்லை. என்னுடைய ஆயிரோக்யம் மற்றும் ஆர்வம் இதற்காக தான் செய்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full