வீட்ல இந்த ரெண்டு நாள் நான் வெஜ் இல்லனு ரூல் போட்டாங்க, அதனால் நான். விஜய்யின் Thug மூமென்ட் வீடியோ.

0
8584
vijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் விஜய் மற்றும் அஜித் இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். விஜய் மற்றும் அஜித் இருவரும் கிட்டதட்ட ஒரே வயது உடையவர்கள் தான். ஆரம்ப காலத்தில் விஜய்யை விட அஜித்துக்கு தான் பெண்கள் ரசிகர்கள் அதிகம். தமிழ் சினிமாவின் ஆணழகனாக போற்றப்பட்டு வருபவர் அஜித். ஹீரோக்கள் என்றாலே உடல் அமைப்பில் கவனம் செலுத்துவார்கள். ஆனால், அஜித்துக்கு முதுகில் செய்பட்ட அறுவை சிகிச்சை காரணமாக கடுமையான உடற்பயிற்சிகளை அஜித் செய்வதை நிறுத்திவிட்டார்.

-விளம்பரம்-

ஆனால், விஜய் தற்போது ஒரு கல்லூரி மாணவன் போல தனது உடலை படு பிட்டாக வைத்து வருகிறார். அதற்கு காரணம் அவர் தற்போதும் உடற்பயிற்சியை கைவிடாமல் இருந்து வருகிறார். ஆனால், அஜித்தை போல விஜய்க்கு முதுகில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக மருத்துவர்கள் கடுமையான உடற் பயிற்சியை செய்யக்கூடாது என்று கூறியுள்ளார்கள். இருப்பினும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்துவிடுகிறார்.

இதையும் பாருங்க : பாப் கட், படு ஸ்லிம் லுக் – இது இனியானு சொன்னா கண்டிப்பா நம்ப மாட்டீங்க.

- Advertisement -

பல ஆண்டுகளுக்கு முன்னர் விஜய் அளித்த பேட்டி ஒன்றில் இது குறித்து அவர் கூறியுள்ளார். இதுமட்டுமல்லாம் இவர் மிகுந்த அசைவப் பிரியர், விஜய்க்கு வாரத்தில் 7 நாளும் அசைவம் இருக்க வேண்டுமாம். இதுகுறித்து அந்த பேட்டியில் பேசியுள்ள விஜய், கொஞ்சம் நாலா செய்வாய் மட்டும் வெள்ளிக்கிழமை இரண்டு நாளில் வெறும் சைவம் மட்டும் தான் என்று ரூல்ஸ் போட்டாங்க வீட்ல.

அதுனால அந்த ரெண்டு நாள் மட்டும் ஷூட்டிங்ல சாப்டறது, அங்க நம்மல கேக்க முடியாது. வீட்ல தான பண்ண கூடாதுனு சொன்னாங்க ஆனால், ஷூட்டிங்ல சாப்பிடறது. நான் வெஜ் இல்லாம இருக்க முடியாது. எல்லாம் புடிக்கும் ஆனால், மட்டன் கொழம்பு என்றால் மிகவும் பிடிக்கும் என்று கூறியுள்ளார். வாரத்தில் 7 நாள் நான் வெஜ் சாப்பிட்டும் விஜய் தற்போதும் எப்படி உடலை பிட்டாக வைத்திருக்கிறார் என்பது கேள்விக்குறி. அதற்கான ரகசியமும் விஜய் சொல்லி இருக்கார். அதை வேறு ஒரு பதிவில் பார்க்கலாம்.

-விளம்பரம்-
Advertisement