யாரையாவது கொலை பண்ணனும், சீரியல் நடிகையின் உச்சகட்ட விரக்தி பதிவு (அஜித் ரசிகர் தொல்லை காரணமா ?)

0
312
sreenidhi
- Advertisement -

தற்போது இருக்கும் காலகட்டத்தில் சினிமா நடிகைகளுக்கு இணையாக சின்னத்திரை நடிகைகளும் ரசிகர் மத்தியில் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தையே வைத்து வருகின்றனர். அதனால் சின்னத்திரை நடிகைகள் எது செய்தாலும் அது பேசு பொருளாக மாறிவிடுகிறது. இதனால் ஒரு சில சமயங்களில் சின்னத்திரை பிரபலங்கள் சர்ச்சையிலும் சிக்கிவிடுகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்து பேசி அஜித் ரசிகர்களால் தொல்லைகளை சந்தித்து வருபவர் சின்னத்திரை சீரியல் நடிகை ஸ்ரீநிதி.

வீடியோவில் 4 : 17 நிமிடத்தில் பார்க்கவும்

-விளம்பரம்-

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 7C உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் நடிகை ஸ்ரீநிதி.  இவர் குழந்தை பருவத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து வருபவர். தற்போது இவர்  நீ மோகினி, புதுப்புது அர்த்தங்கள் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான வலிமை படம் பார்த்த ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை என பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

- Advertisement -

வலிமை பட விமர்சனம் :

அந்த வகையில் சீரியல் நடிகை ஸ்ரீநிதியும் வலிமை படத்தை பார்த்து கமெண்ட் சொல்லியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் வலிமை படத்தில் ஒரு சின்ன ரோலில் ஸ்ரீநிதியின் நெருங்கிய தோழி சைத்ரா ரெட்டி நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், ஸ்ரீநிதி இடம் மீடியாக்காரர்கள் வலிமை படம் எப்படி இருக்கிறது என்று கேட்கிறார்கள். அதற்கு ஸ்ரீநிதி கூறியது, அஜித் சாரை நான் நேரில் கூட பார்த்துவிடுவேன். வலிமை படம் பார்க்க பொறுமை வேண்டும். ஆனால், எனக்கு பார்க்க பொறுமை இல்லை.

திட்டி தீர்க்கும் அஜித் ரசிகர்கள் :

படம் எப்படி இருக்குனு நீங்களே போய் பாருங்கள். ரொம்ப கொடுமையாக இருக்கிறது. அஜித் சார் கியூட்டாக நடித்திருக்கிறார். ஆனால், படம் ஓடுவதை விட அதிகம் பைக் தான் ஓடுகிறது என்று கூறினார். இப்படி இவர் கூறி இருந்த வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலானது. இதை தொடர்ந்து அஜித் ரசிகர்கள் பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதிலும் சிலர் இவருக்கு கொலை மிரட்டலும் விட்டுவருகின்றனராம்.

-விளம்பரம்-

கற்பழிப்பு மிரட்டல் விடுத்த ரசிகர்கள்:

கடந்த சில நாட்களுக்கு முன் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், பேச்சிலர் படத்தில் நடித்த நடிகை திவ்யபாரதி மாதிரி உன்னை கர்ப்பமாக்கி நடு ரோட்டில் விடனும் என்றெல்லாம் கமென்ட் போட்டு இருந்தார்கள் என்று வேதனையுடன் கூறி இருந்தார். இப்படி ஒரு நிலையில் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில், என் வாழ்க்கையில் எதுவுமே ஈஸியா கிடைக்காது போலெ,என் மொத்த வாழ்க்கையும் அப்படிதான் இருக்கும் போல.

ஸ்ரீநிதியின் பதிவு :

உண்மையா சொல்லனும்னா நான் வாழ்க்கை ஓட விரக்தில இருக்கேன் ,யாரையாவது பார்த்தா கண்டிப்பா கொலை கூட பண்ணிடுவேன் ஆனா இப்போதைக்கு எனக்கு அழுக்குறத தவிர வேற ஒன்னும் பண்ண முடியாது என தெரிவித்துள்ளார்.இந்த பதவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும், அஜித் ரசிகர்களின் தொடர் தொல்லையால் மன உளைச்சலுக்கு ஆளாகி ஸ்ரீநிதி இப்படி பதிவிட்டுள்ளாரா என்பது தெரியவில்லை.


Advertisement