கணவரை பிரிவிதாக அறிவித்த நாதஸ்வரம் சீரியல் நடிகை – சன் டிவி சீரியல் நடிகருடன் இரண்டாம் திருமணமாம்

0
544
- Advertisement -

திருமணம் ஆகி சில ஆண்டுகளிலேயே விவாகரத்து பெற்று இரண்டாம் திருமணம் செய்யப்போவதாக நாதஸ்வரம் சீரியல் நடிகை ஸ்ரித்திகா போட்டிருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சின்னத்திரை சீரியல் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர் ஸ்ரித்திகா. இவர் சன் 2010 ஆம் ஆண்டு திருமுருகன் இயக்கத்தில் ஒளிபரப்பப்பட்ட “நாதஸ்வரம்” சீரியலில் மலர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

இந்த நாதஸ்வரம் சீரியல் மூலம் தான் இவர் மக்கள் மத்தியில் பெரிய அளவு பிரபலமாகி தனெக்கென ரசிகர் பட்டாளத்தையும் சேர்த்தார். இந்த சீரியலை தொடர்ந்து இவர் மாமியார் தேவை, வைதேகி, உறவுகள் சங்கமம் போன்ற பல தொடர்களில் கதாநாயகியாக நடித்து இருந்தார். பின் இவர் முகூர்த்தம், கலசம், கோகுலத்தில் சீதை, உயிர் என பல சீரியல்களில் முன்னணி துணை கதாநாயகியாகவும் நடித்து இருந்தார்.

- Advertisement -

ஸ்ரித்திகா குறித்த தகவல்:

அதனை தொடர்ந்து இவர் கல்யானபரிசு, அழகு, மகராசி போன்ற பல சீரியல்களில் நடித்து பிரபலம் ஆகி இருக்கிறார். மேலும், இவர் சீரியல் நடிகை மட்டுமில்லாமல் தொகுப்பாளினியாக பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார். சின்னத்திரை மட்டும் இல்லாமல் வெள்ளித்திரை படங்களில் நடிகை ஸ்ரிதிகா நடித்து இருந்தார். அதோடு விளம்பர படங்களிலும் கூட நடித்து இருந்தார்.

ஸ்ரித்திகா திரைப்பயணம்:

அதிலும், 2008 ஆம் ஆண்டு வெளியான ‘மகேஷ், சரண்யா மற்றும் பலர்’ என்ற படத்தின் மூலம் தான் இவர் வெள்ளித்திரையில் பிரபலமானார் . இதனை தொடர்ந்து வெண்ணிலா கபடிகுழு, தனுஷின் வேங்கை, பாலு தம்பி மனசிலே, மதுரை To தேனீ உள்ளிட்ட ஒரு பல படங்களில் நடித்து இருந்தார். அதன் பின் இவருக்கு சினிமாவில் பட அமைப்புகள் சரியாக அமையவில்லை என்ற உடன் மீண்டும் சீரியல் நோக்கியே வந்து விட்டார்.

-விளம்பரம்-

ஸ்ரித்திகா திருமணம்:

இதனிடையே கடந்த 2019 ஆண்டு நாதஸ்வரம் புகழ் நடிகை ஸ்ரிதிகாவுக்கு, சநீஸ் என்பவருடன் திருமணம் நடந்து முடிந்தது. இவர்களுடையது அரேஞ்ச் மேரேஜ். பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இவருடைய திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள். இவர்களின் திருமண புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வைரலாகி இருந்தது. திருமணத்திற்கு பிறகும் ஸ்ரித்திகா சீரியல்களில் நடித்து வந்தார்.

இரண்டாம் திருமணம் செய்யும் ஸ்ரித்திகா:

தற்போது இவர் தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை ஸ்ரித்திகா இரண்டாவது திருமணம் செய்ய இருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இவர் மகராசி சீரியலில் தன்னுடன் நடித்த ஆர்யான் என்பவரை தான் திருமணம் செய்யப் போகிறார். இவரும் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய முதல் திருமணத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் விவாகரத்து பெற்று தன்னுடன் நடித்த சீரியல் நடிகரை தான் ஸ்ரித்திகா திருமணம் செய்ய இருக்கிறார். இது தொடர்பாக அவர் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் ஒன்று போட்டு இருக்கிறார்.

Advertisement