பிக் பாஸ் ஜூலியால் நடந்த ஆள்மாறாட்டம் ..? பிரபல சீரியல் நடிகை புலம்பல் !

0
3463
serial actressVisalakshi
- Advertisement -

ஜோடி’ ஷோவில் ஆடிய ஜூலியை நினைவிருக்கிறதா? உடன் ஆடிய சாய் சக்தியுடன் செட் ஆகாததால், அரை இறுதிச் சுற்றோடு நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியவர். பிறகு சில பல சீரியல்களில் நடித்தார். சினிமாவில் டெக்னிகல் சைடில் பணிபுரியும் மணிகண்டன் என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். சிறிய இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சீரியல் பக்கம் வந்தார். ‘அபூர்வ ராகங்கள்’ தொடரில் 50 எபிசோடுகள் வரை வந்தவரை, மீண்டும் காணவில்லை!. சீரியல் 700 எபிசோடுகளைக் கடந்துவிட்ட நிலையில், அதே சீரியலில் அதே வில்லி கேரக்டருக்கு மறுபடியும் ரீ-என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

-விளம்பரம்-

visalakshi actress

- Advertisement -

நான் சுமார் மூணு வருடமா வேலை இல்லாம வீட்டுல இருந்ததுக்கு இதுதான் காரணம். ஒரு சீரியல்ல நடிச்சிட்டிருந்தப்போ, இன்னொரு சீரியல்லகூட இல்லை, இன்னொரு சேனலோட ரியாலிட்டி ஷோவுல ஒரு மணிநேர நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அது பிரச்னை ஆயிடுச்சு!

இப்போ மறுபடியும் அதே சீரியல்ல நடிக்கிறேன். இந்த மூணு வருடமும் என் வாழ்க்கை எப்படிக் கடந்ததுனு எனக்கு மட்டும்தான் தெரியும். ‘தேதிகள்ல பிரச்னை’, ‘ஷூட்டிங்ல ஒழுங்கா கலந்துக்கிறதில்லை’ இப்படி ஏதாச்சும் காரணம் சொன்னா ஏத்துக்கலாம். இதெல்லாம் இல்லாம வேற எதையோ உள்ளே வெச்சுகிட்டு, ஒரு நேரத்துல ஒரு சீரியல்தான் பண்ணனும்னா என்ன சொல்றது” என இத்தனை நாள் வீட்டில் இருந்த காரணத்தைத் தெளிவாக, அதேநேரம் வார்த்தைகளில் வலிகலந்து உணர்த்துகிறார், ஜூலி.

-விளம்பரம்-

julie

பிக்பாஸ்’ ஜூலி வந்தபிறகு என்னை மறந்துட்டாங்கன்னே சொல்லலாம். நான் முன்னாடி நடிச்ச சீரியல், ரியாலிட்டி ஷோ எல்லாமே மறக்கடிக்கப்பட்ருச்சுனும் சொல்லலாம். என்னோட ஒரிஜினல் பேரு விஷாலாட்சி. பேசாம, இந்தப் பெயரையே இனி கன்டினியூ பண்ணலாமானு யோசிட்டிருக்கேன். வாய்ப்பு எப்படிப் போச்சுனா, நான் நிகழ்ச்சிகள்ல கலந்துக்கிட்டு வருவேன். நிகழ்ச்சிக்காக ஃபாரின்கூட போயிட்டு வருவோம். அதுக்காக என்னைக் கூப்பிடறதுக்குப் பதிலா, ‘பிக்பாஸ்’ ஜூலி நம்பருக்குக் கால் பண்ணிடுவாங்க. அவங்களும் ‘ஆமாங்க நான்தான் ஜூலி’னு சில நிகழ்ச்சிகள்ல கலந்துருக்காங்க. அதேநேரம் சில ஒருங்கிணைப்பாளர்கள் தெளிவா, ‘இல்லைங்க நாங்க கூப்பிடுறது ‘ஜோடி’ ஜூலியை’னும் சொல்லியிருக்க்காங்களாம்.’ எனச் சிரிக்கிறார், விஷாலாட்சி என்கிற ஜூலி.

Advertisement