பட வாய்ப்புகளை தவறவிட்ட சேது பட நடிகை.! தற்போதைய பரிதாப நிலை.!

0
3904
- Advertisement -

பாலா இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான ‘சேது’ திரைப்படம் விக்ரம் வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய திருப்புமுனை படமாக அமைந்தது. விக்ரமிற்கு சசீயான் என்ற பட்டப்பெயரை கொடுத்ததும் இந்த படம் தான். இந்த படத்தில் அபிதா குஜலாம்பாள் என்ற கதாபத்திரத்தில் விக்ரமிற்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் அபிதா.

-விளம்பரம்-
Sethu

அதன் பின்னர் தமிழ் சினிமாவில் ஒரு ரௌண்டு வருவார் என்று எதிர்பார்த்த இவருக்கு பெரிய ஹிட் படங்கள் அமையவில்லை சேது படத்திற்கு பின்னர் தமிழில் சீறி வரும் காலை, பூவே பெண் பூவே போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அதன் பின்னர் சினிமாவில் வாய்ப்பு குறையவே சீரியல் பக்கம் திரும்பினார். சன் தொலைக்காட்சியில் இவர் நடித்த ‘திருமதி செல்வம்’ தொடர் மெகா ஹிட் அடைந்தது. அதன் பின்னர் ஒரு சில சீரியல் தொடர்களில் நடித்து வந்தார்.

இதையும் பாருங்க : நீச்சல் உடைகளில் போஸ் கொடுத்துள்ள வழக்கு என் 18/9 நடிகை மனிஷா.! 

- Advertisement -

கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் திருமணத்திற்குப் பின்னர் இவருக்கு இரண்டு அழகான பெண் குழந்தையும் பிறந்தது திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தார் இறுதியாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான முத்தாரம் என்கிற டிவி தொடர்களில் நடித்து வந்தார் ஆனால் அதற்குப் பின்னர் இவருக்கு எந்த சீரியல் வாய்ப்பும் பட வாய்ப்பும் கிடைக்க வில்லை.

திருமதி.செல்வம்

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற அபிதா, தான் தவறவிட்ட பட வாய்ப்புகள் குறித்து பேசியுள்ளார், சேது படத்திற்கு பின்னர் இவருக்கு பல பட வாய்ப்புகள் கிடைத்து உள்ளது. ஆனால், சரியான மேனேஜரும் சரியான பிஆர்ஓவும் இல்லாததால் எந்த படத்தை தேர்ந்தெடுப்பது என்று சரியாக முடிவெடுக்க முடியாமல் இருந்துள்ளார்.

-விளம்பரம்-
அபிதா குடும்பத்துடன்...

அதன் பின்னர் சில மோசமான படங்களில் கூட நடித்தாராம் சொல்லப்போனால் சேது படத்திற்கு பின்னர் சிட்டிசன் படத்தில் மீனா கதாபாத்திரத்தில் இவர் தான் நடிக்க இருந்தார் ஆனால் அந்த பட வாய்ப்பைக் கூட இவர் நிராகரித்து விட்டாராம் அதன் பின்னர் ஏன் அந்த பட வாய்ப்பை மிஸ் செய்தோம் என்று மிகவும் சிறியதாகும். தற்போது சினிமாவிலும் சீரியலில் எந்த வித வாய்ப்பும் இல்லாமல் பரிதாப நிலையில் இருக்கிறார் அபிதா.

Advertisement