இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் காட்டுத்தீயை விட வேகமாக பரவி கொண்டு இருக்கிறது. இந்த கொரோனா நாளுக்கு நாள் அப்பாவி மக்களின் உயிரை பறித்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால் வேலைக்காக பல்வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்த லட்சக்கணக்கான தொழிலாளர்கள் தண்ணீர், உணவு, இருப்பிடம் இல்லாமல் சாலைகள், ரயில் நிலையங்கள், விடுதிகள்,மண்டபங்கள் என பல இடங்களில் தங்கி தவித்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில் ரயில் நிலையத்தில் தாய் உயிரிழந்தது கூட தெரியாமல் அவரது போர்வையை இழுத்து விளையாடி குழந்தை. இதை அறிந்த பிரபல நடிகர் அந்த குழந்தையை அறக்கட்டளை மூலம் தத்தெடுத்து உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் குஜராத்தில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் தனது குழந்தையுடன் தன்னுடைய சொந்த ஊரான பீகார் மாநிலம் முஷாஃபர்பூருக்கு ரயில் மூலம் திரும்பினார்.

Advertisement

முஷாஃபூர் ரயில் நிலையத்தை சென்றடைந்தார் அந்தப் பெண். உடனே அந்த பெண் தன் நிலை தடுமாறி கீழே விழுந்து உயிரிழந்தார். ஏற்கெனவே அந்த பெண் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிய வந்து உள்ளது. அப்போது ரயில்வே நிலையத்தில் தனது தாயின் உடல் அருகே அந்த குழந்தை நின்று இருந்தது. தான் தாய் இறந்தது கூட தெரியாமல் போர்வையை இழுத்து விளையாடியது அந்த குழந்தை. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. மேலும், அந்தக் குழந்தையின் நிலை என்னவாகப்போகிறதோ? என்று பலரும் கவலை பட்டனர்.

இந்நிலையில் நேற்று அக்குழந்தையை நடிகர் ஷாரூக்கானின் மீர் ஃபவுண்டேஷன் தத்தெடுத்து இருக்கிறது. இது குறித்து ஷாரூக்கான் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார. அதில் அவர் கூறி இருப்பது, தன் பெற்றோரை இழந்த குழந்தைக்கு அதை தாங்கும் வலியை இறைவன் அளிக்க வேண்டும். அந்த வலி எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியும் என்று கூறி உள்ளார் ஷாருக்கான். நடிகர் ஷாரூக்கானின் இந்த செயலை பார்த்து பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

Advertisement
Advertisement