நான் முதன் முதலாக உடலுறவு கொண்டது அவருடன் தான் - ஷகீலா சொன்ன அந்த நபர் யார் பாருங்க. வீடியோ இதோ.

By Ajju · 15/4/2022

சகிலா அளித்த பேட்டியை விமர்சித்து நெட்டிசன்கள் போட்ட மீம்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சினிமா உலகில் சில்க் ஸ்மிதாவுக்கு பிறகு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை ஷகிலா. ஷகிலா பெயர் சொன்னால் போதும் அனைத்து ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். ஏன்னா, போதும் போதும் என்ற அளவிற்கு இவருடைய படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டிய நடிகை. இவர் தமிழ் சினிமா உலகில் துணை நடிகையாக தன்னுடைய திரைப் பயணத்தை தொடங்கினார். இவர் ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார்.

பின் இவர் கவுண்டமணியுடன் சில படங்களில் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்து இருந்தார். மேலும், இவருடைய குடும்ப சூழ்நிலை காரணமாக இவர் மலையாள கரையோரம் ஒதுங்கி கவர்ச்சி படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவர் முதலில் கவர்ச்சி நாயகியாக வலம் வந்தது மலையாள கவர்ச்சி படங்களில் தான். அதனாலேயே இவருக்கு கேரளாவில் அதிக ரசிகர்கள் உள்ளார்கள் என்று சொல்லும் அளவுக்கு கவர்ச்சி விருந்து படைத்தவர். இவருடைய கவர்ச்சி படங்களுக்கு ரசிகர்கள் மயங்காதவர்கள் இருக்க மாட்டார்கள்.

இதையும் பாருங்க : மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதால் இளையராஜாவை விமர்சித்தாரா மாரி செல்வராஜ் ? சர்ச்சைக்கு அவரின் விளக்கம்.

சகிலா பற்றிய தகவல்:

மேலும், ஷகீலா தனது வாழ்கை வரலாற்றை படமாக எடுத்துள்ளார். இளமை போன பின்னரும் இவர் ஷகீலாவாக பல படங்களில் நடித்து இருந்தார். கவர்ச்சி நடிகையாக இருந்த இவரை தற்போது அம்மா என்று சொல்லும் அளவிற்கு மாற்றியது குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் பேராதரவை பெற்று வரும் நிகழ்ச்சி ‘குக் வித் கோமாளி’. இதுவரை தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சமையல் நிகழ்ச்சிகளிலேயே இந்த நிகழ்ச்சி தான் டிஆர்பி -யில் முதலிடத்தில் உள்ளது.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சகிலா:

அதுமட்டுமில்லாமல் கொரோனா லாக்டவுனில் மக்களுக்கு இருந்த பிரச்சனைக்கு ஒரு மருந்தாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது என்றே சொல்லலாம். இந்த நிகழ்ச்சி சமையல் மட்டும் இல்லாமல் பலரையும் சிரிக்க வைக்கும் நிகழ்ச்சியாக உள்ளது. மேலும், முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து தற்போது மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. அதற்கு முக்கிய காரணமே இந்த நிகழ்ச்சியில் வரும் கோமாளிகள் தான். கடந்த இரண்டாம் சீசனில் சகிலா போட்டியாளராக கலந்து கொண்டு இருந்தார். அதில் இவர் மிக திறமையாக விளையாடி இரண்டாம் இடத்தை பிடித்து இருந்தார்.

https://twitter.com/chettyrajubhai/status/1514917878629208066

சகிலா தத்து எடுத்த திருநங்கை:

அதே போல இவர் திருமணம் செய்துகொள்ளவில்லை என்றாலும் இவர் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். மிளா ஒரு ஆடை வடிவமைப்பாளராக வேலை செய்து வருகிறாராம். அதே போல இவர் சில சீரியல்களில் கூட நடித்து இருக்கிறாராம். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தியாகம், மருதாணி சீரியலில் நடித்துள்ளாராம். தனது சொந்த அம்மாவை விட ஷகீலா மீது தான் மிகுந்த பாசம் கொண்டுள்ளார் மிளா. இந்த நிலையில் சமீபத்தில் ஷகிலா அவர்கள் பேட்டி ஒன்று அளித்திருக்கிறார். அதில் அவரிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டது.

சகிலா அளித்த பேட்டி:

அப்போது அதில் அவரிடம் நீங்கள் வெர்ஜினா? என்று கேட்டதற்கு சகிலா சிரித்துக்கொண்டே நான் இல்லை என்று கூறினார். உடனே உங்களுடைய முதல் செக்ஸ் குறித்து கூறுங்கள் என்று கேட்டதற்கு ஷகிலா வெட்கப்பட்டு நான் முதல் செக்ஸ் வைத்து இருக்கிறேன். என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர். அவருடைய பெயர் ரிச்சர்ட் என்று கூறியிருந்தார். இப்படி சகிலா பேசி இருக்கும் வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. இதை பார்த்த பலரும் கிண்டல் அடித்து இதையெல்லாம் கேள்வியா டா? எவன்டா இந்த கேள்வி எழுதியது? என்று மீம்ஸ்குகளை குவித்து கிண்டல் செய்து வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full