மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டதால் இளையராஜாவை விமர்சித்தாரா மாரி செல்வராஜ் ? சர்ச்சைக்கு அவரின் விளக்கம்.

0
343
ilayaraja
- Advertisement -

பிரதமர் மோடியின் ஆட்சியை அம்பேத்கார் பார்த்து இருந்தால் அவரே பெருமைப்படுவார் என்ற நிகழ்ச்சி ஒன்றில் இசைஞானி இளையராஜா பேசியிருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்திய சினிமா உலகில் இசையில் ஜாம்பவானாக திகழ்பவர் இளையராஜா. இவருடைய இசைக்கு மயங்காத உயிர்களே இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு தன்னுடைய இசையால் கட்டிபோட்டவர். மேலும், இவர் இந்தியாவின் இசை திரைப்பட இசையமைப்பாளர்களுள் ஒருவர் ஆவார். மேலும், இவர் தமிழக பாடல்களுக்கு இசை, கருநாடக இசை மற்றும் மேற்கத்திய இசையில் புலமை பெற்றவர்.

-விளம்பரம்-

இளையராஜாவின் சாதனைகள்:

இதனால் இவருக்கு இந்திய அரசின் படத்துறை-சாரா விருதுகளில் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் விருது 2010 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. அதுமட்டும் இல்லாமல் இளையராஜாவுக்கு இந்திய நாட்டின் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண் விருது 2018 ஆம் ஆண்டு இந்திய அரசால் வழங்கப்பட்டது. சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை நான்கு முறை இவர் பெற்றுள்ளார். மேலும், இவர் சில வருடங்களாகவே இசைக்கச்சேரிகள் நடத்துவதில் அதிக ஆக்டிவாக இருக்கிறார்.

- Advertisement -

இளையராஜா இசை கச்சேரி:

சமீபத்தில் கூட இவர் சென்னையில் இசை கச்சேரி நடத்தி இருந்தார். இதில் தனுஷ் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு இருந்தார்கள் என்பது குறிப்பிடத்தகக்து. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி குறித்து இளையராஜா பேசி இருக்கும் தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், சமீபத்தில் இசைஞானி இளையராஜா அவர்கள் புத்தக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு இருந்தார். அப்போது மோடியும், அம்பேத்கரும் என்ற புத்தகம் வெளியாகி இருந்தது.

புத்தக விழாவில் இளையராஜா:

இந்த புத்தகத்திற்கு முன்னுரையை இளையராஜா எழுதி இருந்தார். மேலும், இந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இளையராஜா கூறியிருப்பது, பிரதமர் மோடியின் தலைமையிலான அரசின் கீழ் நாடு வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அனைத்து துறைகளிலும் முன்னேறிக் கொண்டு இருப்பதாக இருக்கிறது. இந்தியாவின் உள்கட்டமைப்பு மிக சிறப்பாக அமைக்கப்பட்டு வருகிறது. சமூகநீதி விஷயத்திலும் பிரதமர் மோடி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

-விளம்பரம்-

பிரதமர் மோடி குறித்து இளையராஜா சொன்னது:

குறிப்பாக முத்தலாக் உள்ளிட்ட சட்டத்தின் மூலம் பெண்கள் வாழ்வில் மாற்றத்தை பிரதமர் மோடி ஏற்படுத்தியுள்ளார். தற்போது இதனை அம்பேத்கார் கண்டால் பெருமைப்படுவார். அம்பேத்கர் மற்றும் மோடி ஆகிய இருவருமே ஏழ்மையின் ஒடுக்குமுறையை அனுபவித்தவர்கள் என்பதால் அந்த ஏழ்மையை ஒழிக்க பாடுபட்டவர்கள். இந்தியாவின் மீது மிகப்பெரிய கனவு கண்டு அதன் செயல்பாடுகளை செய்து வருபவர் மோடி என்று இளையராஜா மோடி குறித்து புகழ்ந்து பேசி இருக்கிறார்.

சர்ச்சையில் சிக்கிய மாரிசெல்வராஜ் :

இளையராஜாவின் இந்த பேச்சு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படி ஒரு நிலையில் அம்பேத்காரை மோடியுடன் ஒப்பிட்டதால் மாரி செல்வராஜ் ‘இளையராஜாவின் கருத்திற்கும் வருத்தம் தெரிவிப்பதாகவும், இளையராஜா மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளேன். இதுகுறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை’ என்று கூறியதாக செய்திகள் வெளியானது. ஆனால், இது பொய்யான செய்தி என்று மாரி செல்வராஜ் விளக்கம் கொடுத்துள்ளார்.

Advertisement