உனக்கு வெக்கமா இல்ல, எத்தன வாட்டி திட்டு வாங்குவ – சித்தார்த்தை வெளுத்து வாங்கிய ஷகீலா.

0
1008
shakeela
- Advertisement -

சாய்னா நேவால் பற்றி சர்ச்சைக்குரிய ட்வீட் செய்து பெரும் சர்ச்சையில் சிக்கி இருக்கும் சித்தார்த் குறித்து பிரபல நடிகை ஷகீலா வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தேதி பஞ்சாபின் ஃபெரோஸ்பூருக்கு பிரதமர் மோடி சென்றிருந்தார். அப்போது பாதுகாப்பு குறைபாடு காரணமாக பிரதமர் மோடி பாதியிலேயே திரும்பினார். இது சமூக வலைத்தளங்களில் பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு பல்வேரு தரப்பினும் பஞ்சாப் அரசிற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த வகையில் சாய்னா நேவாலும் ட்வீட் ஒன்றை போட்டு இருந்தார்.

-விளம்பரம்-
சித்தார்த் பதிவு

அதில், ‘இந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால் அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக் கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலுக்கு வலுவான கண்டனம் செய்கிறேன் என்று பதிவிட்டிருந்தார். இதை பார்த்த நடிகர் சித்தார்த் அவர்கள் ட்விட்டரில் அதற்கு பதிலடி கொடுத்திருக்கிறார். அதில் அவர், உலகின் நுட்பமான சேவல் சாம்பியன் கடவுளுக்கு நன்றி. எங்களிடம் இந்தியாவின் பாதுகாவலர்கள் உள்ளனர். உங்களை பார்த்து வெட்கப்படுகிறேன் ரிஹானா என்று பதிலளித்திருந்தார்.

- Advertisement -

எழுந்த கண்டனங்கள் :

சித்தார்த்தின் இந்த பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. மேலும், சித்தார்த் அளித்த பதிவிற்கு தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகார் அளித்தது. இந்த நிலையில் சாய்னா, தன்னுடைய பதிவிற்கு சாய்னா நேவாலிடம் மன்னிப்பு கேட்டு நடிகர் சித்தார்த் கடிதம் ஒன்றை எழுதி அதில், சாய்னா நேவாலை டேக் செய்து இருக்கிறார். அந்த கடிதத்தில் சித்தார்த் கூறியுள்ளதாவது ‘ நான் பதிந்த முரட்டுத்தனமான ஜோக்குக்கு உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம்.

This image has an empty alt attribute; its file name is image-61.png

உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நான் இதைவிட இரக்கம் கொண்டவனே. நான் நகைச்சுவை என்று கருதி அந்த ட்வீட்டைப் பதிவிட்டிருந்தாலுமே, அது நல்ல நகைச்சுவை அல்ல. சரியான கருத்தைக் கொண்டு சேர்க்காத அந்த நகைச்சுவைக்காக வருந்துகிறேன்.அதேவேளையில் நான் வார்த்தை விளையாட்டாக பதிந்த அந்த நகைச்சுவை என்னைச் சாடுவோர் கூறுவதுபோல் மலினமான நோக்கம் கொண்டது அல்ல. நான் உண்மையிலேயே பெண்ணியவாதிகளின் ஆதரவாளர்.

-விளம்பரம்-

சித்தார்த் மன்னிப்பு சாய்னா பதில் :

ஒரு பெண் என்பதால் உங்களை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த ட்வீட்டை நான் பதிவு செய்யவில்லை. நீங்கள் எப்போதுமே எனது சாம்பியன் தான். நேர்மையுடன் சித்தார்த் என்று பதிவிட்டு இருந்தார். சித்தார்த்தின் இந்த மன்னிப்பு கடிதம் பற்றி பேசிய சாய்னா, அவரே சொல்லிவிட்டு இப்போது மன்னிப்பு கேட்கிறார். அன்று ட்விட்டரில் நான் ட்ரெண்ட் ஆனதைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன். நான் அவருடன் பேசவில்லை, ஆனால் அவர் மன்னிப்பு கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன். கடவுள் அவரை ஆசீர்வதிப்பார்” என்று கூறி இருந்தார்.

சித்தார்துக்கு ஷகீலா கேள்வி :

சித்தார்த்தின் சர்ச்சை கருத்திற்கு தற்போது வரை பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் நடிகை ஷகீலா தன் பங்கிற்கு சித்தார்த்தை வெளுத்து வாங்கி இருக்கிறார். அதில் ‘உனக்கு வேற வேலை வெட்டி கிடையாதா நீ ஹீரோவாக நடிக்கிறேன் ஆனால் நீ ஹீரோ கிடையாது உன்னால ஒலிம்பிக்கில் கலந்து கொள்ளவது முடியுமா ? உனக்கு வெக்காம இல்ல.’ என்று பேசி இருக்கிறார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement