பிக் பாஸ்க்கு இதனால் தான் போல – ஷகீலா மகள் சொன்ன உண்மை (அப்போ இந்த போட்டோ எப்படி)

0
32367
- Advertisement -

தமிழக மக்கள் அனைவரும் ஆவலுடன் எதிர் நோக்கி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சி நேற்று மாலை பிரம்மாண்டமாக விஜய் டிவியில் தொடங்கப்பட்டது. கடந்த சீசன்களை விட இந்தமுறை பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி புத்தம் புது பொலிவுடன் பார்ப்போரை பிரமிக்க வைக்கும் அளவிற்கு உள்ளது. பிக் பாஸ் வீடு முழுவதும் பசுமை வண்ணம் கான்செப்டில் உள்ளது. இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 தாறுமாறாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த முறை நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

-விளம்பரம்-
mila

அதுமட்டுமில்லாமல் இந்த முறை பிக் பாஸ் சீசன் 5 யில் போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு தினுசாக இருக்கிறார்கள். இந்நிலையில் பிக் பாஸ்ஸில் மிலா இல்லாததை குறித்து வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி தொடங்க போகிறது என்ற பேச்சை ஆரம்பித்ததில் இருந்தே சகிலாவின் மகள் மிலா இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார் என்று பல தகவல்கள் சோசியல் மீடியாவில் வந்தது. இந்த நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி உடன் மிலா, பிட் பாஸ் நிகழ்ச்சியில் இல்லையா? என்று பலர் அதிர்ச்சியில் கேட்டு வருகிறார்கள்.

இதையும் பாருங்க : உங்கள சின்ன வயசுல பாத்த மாதிரி இருக்கு – டாக்டர் பட விழாவில் அர்ச்சனாவின் மகள் பேச்சை கேட்டு வியந்த படக்குழு.

- Advertisement -

இதற்கு தற்போது மிலா அவர்கள் பதில் அளித்து உள்ளார். அதில் அவர் கூறியது, நான் ஏன் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வில்லை என்றால் எனக்கு நிறைய பர்சனல் வேலை இருக்கிறது. அதோடு இதை பத்தி யாரு கேட்டாலும் யார் பேசினாலும் அம்மா கிட்ட பேசி கொள்ளுங்கள் என்று சொல்லிவிடுவேன். அம்மா கூட நீ வைல்ட் கார்டில் போவேன் என்று சொன்னார்கள். ஆனால், இந்த 5 மாதமாக சோசியல் மீடியாவில் இதை பத்தி தான் கேப்பாங்க.

உண்மையிலேயே என்கிட்ட வந்து யாரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை பற்றி பேசவே இல்லை. ஆனால், இவர்கள் எல்லாருமே தான் சோசியல் மீடியாவில் பயங்கரமாக பண்ணிட்டு வந்தார்கள். என்னை கூப்பிடவில்லை என்று என்க்கு எந்த வருத்தமும் கிடையாது. நான் சந்தோஷமாக தான் இருக்கிறேன். எங்க கமினிட்டி சார்பாக நமிதா போனது ரொம்ப சந்தோஷமாக இருக்கு என்று கூறினார். இப்படி இவர் பேசிய வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஷகிலாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகை. இவருடைய மகள் தான் மிலா. இவர் திருநங்கை என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று.

-விளம்பரம்-
Advertisement