பல நடிகைகள் மற்றும் நடிகர்கள் குறித்து அவதூறாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதன் மகள் குறித்து ஷகீலா பேசி இருக்கும் வீடியோ வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா உலகில் பிரபலமான காமெடி நடிகராக இருந்தவர் பயில்வான் ரங்கநாதன். இவர் ரஜினி, கமல் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் உடன் இணைந்து நடித்து இருக்கிறார். பின் சினிமாவில் வாய்ப்புகள் குறைந்தவுடன் தனியாக யூட்யூப் சேனல் உருவாக்கி அதில் சினிமா பிரபலங்கள் பலரை பற்றி அவதூறாக பேசி வருகிறார். அதோடு இவர் நீண்ட காலமாகவே பத்திரிகையாளராக பணியாற்றி வருகிறார். அதனால் சினிமா துறையில் நடக்கும் பல அந்தரங்க விஷயங்களை வெளி உலகிற்கு கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.
மேலும், இவர் எம்ஜிஆர் காலத்தில் இருந்து தமிழ் சினிமாவில் இருந்து வருவதால் சினிமா நட்சத்திரங்களைப் பற்றி அறியாத பல ரகசியங்களை தன்னுடைய பத்திரிக்கையின் மூலம் வெளியிட்டு வருகிறார். இவர் சினிமா துறையில் உள்ள நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என ஒருவரையும் விட்டு வைக்காமல் அவர்களைப் பற்றி அவதூறாக பேசி வீடியோக்களை வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து உள்ளார். அதனால் இவருக்கும் சினிமா துறையை சேர்ந்த பிரபலங்களுக்கும் இடையயே வாக்குவாதம் இருந்து கொண்டு தான் இருக்கின்றது.
பயில்வான் ரங்கநாதன் குறித்த தகவல்:
இருந்தாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் பயில்வான் தன்னுடைய வேலையை தொடர்ந்து செய்து வருகிறார். அதிலும் சமீப காலமாக இவர் நடிகைகள் குறித்து ஆபாசமாக பேசி வருகிறார். இதை சில பேர் கண்டு கொள்ளவில்லை என்றாலும் சில பேர் நேரடியாகவே சண்டை போட்டு இருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பயில்வான்-ஷகீலாவுக்கு இடையே காரசாரம் நடந்து இருக்கிறது.
வாழ்ந்து காட்டுவோம் நிகழ்ச்சி:
தற்போது வாழ்ந்து காட்டுவோம் என்ற நிகழ்ச்சி கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியை நடிகை குயிலி தான் தொகுத்து வழங்கி வருகிறார். குடும்பம் மற்றும் பல்வேறு விவாத பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பி வருகிறார்கள். அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் ரங்கநாதன்- ஷகீலா இருவரும் நேருக்கு நேர் மோதி இருக்கிறார்கள். அதில் பயில்வான், நீங்க லிவிங் லைப் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு வருகிறீர்களே? எப்போ திருமணம் செய்து கொள்ளப் போகிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.
ரங்கநாதன்- ஷகீலா விவாதம்:
அதற்கு சகிலா, உங்களுக்கு என்ன பிரச்சனை? என்று கேட்டவுடன் இதற்கு முன்னாடி நீங்கள் என்ன மாதிரியான படத்தில் எல்லாம் நடிக்கிறீர்கள் தெரியுமா? ஆனா இப்ப என்ன பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க என்று கேட்டிருக்கிறார். அதற்கு சகிலா, வயிற்று பிழைப்புக்காக நான் எதையோ காட்டி நடிக்கிறேன். அதில் உனக்கு என்ன பிரச்சனை என்று கூறியிருந்தார். உடனே பயில்வான், நானும் வயிற்று பிழைப்புக்காக பேசுகிறேன் என்று கூற வயிற்று பிழைப்புக்காக என்ன வேண்டுமானாலும் பேசலாமா என்று நடுவராக இருக்கும் குயில் கேட்டிருக்கிறார். பின் வயிற்று பிழைப்புக்காக எதை வேண்டுமானாலும் காட்டலாமா? என்று பயில்வான் ரங்கநாதன் கேட்டிருக்கிறார்.
ஷகீலா கொடுத்த பதிலடி:
பின் சகிலா, உங்களுடைய கடைசி பெண் யாரை காதலிக்கிறார் தெரியுமா? என்று கேட்டவுடன் பயில்வான், அப்பட்டமான பொய், வாய் அழுகிவிடும் என்றெல்லாம் சொல்கிறார். இது உண்மையானது தான். என்னிடம் ஆதாரம் இருக்கிறது. என்னுடைய நண்பர் ஒருவர் மூலம் தெரிந்தது. அவருடைய பெண் ஒரு பெண்ணை காதலிக்கிறார் என்று சொன்னவுடன் ரங்கநாதனால் எதுவுமே பேச முடியவில்லை. பயந்து போய் உட்கார்ந்திருக்கிறார். தற்போது இந்த வீடியோ தான் இணையத்தில் வைரலாகி வருகிறது.