தற்கொலைக்கு முயன்ற இளம் ஷகீலா பட நடிகை.! வறுமையின் சோகம்.!

0
925
- Advertisement -

கவர்ச்சி நடிகை ஷகிலா வாழ்க்கையை மையமாக வைத்து தயாராகும் படத்தில் ஷகிலா வேடத்தில் நடிப்பவர் ரிச்சா சத்தா. இந்தி திரையுலகில் போராடி முன்னுக்கு வந்துள்ள இவர் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சரப்ஜித் இந்தி படத்திலும் நடித்து இருந்தார்.

-விளம்பரம்-

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற இவர், நான் பணம் சம்பாதிக்கும் ஆசையில் நடிக்க வரவில்லை. என்னுடையை ஒவ்வொரு படத்திலும் திறமையை வெளிப்படுத்தி சிறந்த நடிகை என்று பெயர் வாங்குவதைதான் விரும்புகிறேன். கதாபாத்திரங்கள் மூலம் தனி முத்திரை பதிக்க போராடுகிறேன். கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் இருக்கிறதா என்றுதான் பார்ப்பேனே தவிர எவ்வளவு பணம் வருகிறது என்று கணக்கு பார்க்க மாட்டேன்.

- Advertisement -

நான் 15 வயதிலிருந்தே நடிக்க தொடங்கிவிட்டேன். ஆனால் குடும்பத்துக்காகவே கவர்ச்சியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டது. ஆனால் என்னுடைய குடும்பத்தில் இருந்த ஒருவரே என்னை ஏமாற்றி நான் சம்பாதித்த பணத்தை பிடுங்கி கொண்டார். நிறைய காதல் தோல்விகளும் கூட. இதனால் தற்கொலை கூட செய்ய முடிவெடுத்தேன்.

அக்னிபத் படத்தில் ஹிருத்திக் ரோஷன் தாயாக நடிக்க வாய்ப்பு வந்தது. வயது குறைந்த என்னை அவருக்கு தாயாக நடிக்க அழைத்தது முட்டாள்தனம். நான் மறுத்து விட்டேன்.
ரூ.100 கோடிக்கு படம் வியாபாரம் ஆகவேண்டும் என்று விரும்பும் தயாரிப்பாளர்கள் தீபிகா படுகோனே போன்ற நடிகைகளைத்தான் அணுகுகிறார்கள் என்று கூறியுள்ளர்.

-விளம்பரம்-
Advertisement