ஜோயாவை விமர்சித்து பிரபல சேனல் வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி வருகிறது. சமீப காலமாகவே சினிமாவில் பெண்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் என்ற பெயரில் பாலியல் தொல்லை கொடுப்பது அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் மலையாள சினிமாவிலும் இந்த மாதிரி நிறைய நிகழ்வுகள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2018 ஆம் ஆண்டு சினிமா துறையில் இருக்கும் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் ரீதியான பிரச்சினைகளை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி ஒன்று கேரள மாநில அரசு அமைத்திருந்தது.

பின் இது தொடர்பாக விசாரணையும் நடத்தி இருந்தார்கள். அதனை அடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு முதலமைச்சர் பினராய் விஜயன் இடம் 233 பக்க அறிக்கை ஆவணங்கள், ஆடியோ மற்றும் வீடியோ ஆதாரத்துடன் சமர்ப்பித்து இருந்தார்கள். ஆனால், இதை பல காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பின் கடந்த 19 ஆம் தேதி ஹேமா கமிட்டி அறிக்கையை அரசு வெளியிட்டது. இது மலையாள திரை உலகில் மிகப்பெரிய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
ஹேமா கமிட்டி அறிக்கை:
அதில், நிறைய பெண்கள் அட்ஜஸ்ட்மெண்ட் என்று பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பது தெரிய வந்திருக்கிறது. பெண்கள் மட்டுமில்லாமல் ஆண்களுமே பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளாகி இருப்பதாக கூறப்பட்டு இருக்கிறது. இது குறித்து கேரள சினிமாவில் பெரிய விவாதமே நடந்து கொண்டிருக்கிறது. மேலும், இது தொடர்பாக பிரபலங்கள் பலருமே தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இது தொடர்பாக நடிகை ஜோயாவின் வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையாகி இருக்கிறது.
https://youtu.be/A1nujy_d-78?si=_Ouj23onHRAYjL5N
சர்ச்சையான ஜோயா வீடியோ:
அதாவது, நடிகை ஜோயா அவர்கள் மலையாள நடிகர் ஒருவருடன் சேர்ந்து ரீல்ஸ் ஒன்று செய்திருந்தார். தற்போது அந்த வீடியோவை தான் பிரபல செய்தி சேனல் பதிவிட்டு, ஜோயாவையும் மலையாள பாலியல் புகாரில் சிக்கி இருக்கும் நடிகரையும் ஒப்பிட்டு செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள். இது சோசியல் மீடியாவில் காட்டுத் தீயாய் வைரலாகி இருக்கிறது. இது குறித்து பலரும் ஜோயாவை விமர்சித்தும், கண்டனம் தெரிவித்தும் வருகிறார்கள்.

நடிகை ஜோயா பதிவு:
உண்மையில் அந்த வீடியோ ஜோயா ரீல்ஸ் செய்து போடப்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து நடிகை ஜோயா வேதனையில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், உனக்கு நியாயம் இல்லையா? நடந்தது என்ன தெரியாம ஒரு பொய் போடுறியே, ஒரு பர்சன் வாழ்க்கையை இப்படி அழிக்கிறியே உனக்கு வெட்கமா இல்லையா? நீ ஒரு நியூஸ் சேனல் தானே, இது ஒரு டிக் டாக் வீடியோ. சில வருடங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் போது எடுத்தது. அந்த நேரத்தில் அந்த பாடல் ரொம்ப ட்ரெண்டிங் ஆக இருந்தது. அந்த பாடலின் பெயரும் அந்த நடிகருடைய பெயரும் ஓன்றாக இருந்தது.

சர்ச்சை குறித்த விளக்கம்:
அதனால் தான் நாங்கள் அந்த வீடியோ செய்தோம். இப்ப நடக்குற ப்ராப்ளத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் அம்மா மெம்பர் கூட கிடையாது. படத்தின் ஷூட்டிங்கில் எடுத்த டிக் டாக் வீடியோ அது. இப்ப எடுத்து இந்த மாதிரி நியூஸ் கொடுக்குறீங்க, அறிவு இருக்கா உங்களுக்கெல்லாம். சில கமெண்டுகளை பார்க்கும்போது எனக்கு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணம் வருகிறது. மனதிற்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஆனால், நான் எந்த ஒரு தவறான முடிவையும் எடுக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறார். அதற்கு ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகிறார்கள்.






