விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த ஷாலினி.! வைரலாகும் புகைப்படம்.!

By Rajkumar · 7/1/2019

சிவா இயக்கத்தில் நடிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் திரைப்படம் வரும் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. பாடல்கள், டிரைலர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள விஸ்வாசம் திரைப்படம் குடும்பத்தினருடன் கண்டுகளிக்கக் கூடிய வகையில் தணிக்கை குழு யூ சான்றிதழ் அளித்துள்ளது.

படம் வெளியாக இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில்
படத்துக்கான முன்பதிவு பல திரையரங்குகளில் தொடங்கியது. தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெடுக்கள் வேகமாக முன்பதிவு செய்யப்பட்டன. இன்னும் சில திரையரங்குகள் காட்சிகளை அதிகப்படுத்தி முன்பதிவை தொடங்கியுள்ளன.

இதையும் படியுங்க : விஸ்வாசம் படத்தின் சிறப்பு காட்சியை பார்த்துவிட்டு சிவாவிடம் அஜித் சொன்ன முதல் வார்த்தை.!

இந்நிலையில் விஸ்வாசம் திரைப்படத்தின் சிறப்புக்காட்சியை நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினி நுங்கம்பாக்கத்தில் உள்ள சிறப்பு திரையரங்கில் நேற்று பார்த்துள்ளார். படத்திற்கு பிறகு ரசிகர்கள் சிலருடன் அவர் எடுத்துக்கொண்ட திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

ஷாலினி மட்டுமல்லாமல் ஒளிப்பதிவாளர் வெற்றி மற்றும் சில படக்குழுவினரும் படத்தை பார்த்துள்ளனர். பொதுவாக அஜித்தின் படங்களை ஷாலினி, ரசிகர்களுடன் கண்டுகளிப்பார். இந்தமுறை சற்று முன்னதாகவே விஸ்வாசம் திரைப்படத்தை அவர் பார்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full