தமிழ் சினிமா திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை சாலினி. நடிகை சாலினி அவர்கள் தன்னுடைய மூன்று வயதிலேயே சினிமா துறையில் நடிக்கத் தொடங்கி விட்டார். பின் இவர் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் மட்டும் 90 படங்களுக்கு மேல் நடித்து உள்ளார். அதிலும் நடிகை ஷாலினி அவர்கள் மலையாள மொழியில் மட்டும் 25க்கும் மேற்பட்ட திரைப் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். ஷாலினி அவர்கள் முதன் முதலில் ‘ஓசை’ என்ற படத்தின் மூலம் தான் தமிழில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.

Advertisement

பின் பந்தம்,பிள்ளை நிலா,விடுதலை,சங்கர் குரு,ராஜா சின்ன ரோஜா என பல படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து உள்ளார். ஆனால், இவர் முதன் முதலில் கதாநாயகியாக அறிமுகமானது 1997 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘காதலுக்கு மரியாதை’ படத்தின் மூலம் தான். இந்தத் திரைப்படம் ஃபாசில் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன் மற்றும் ஷாலினி நடிப்பில் மலையாளத்தில் வெளியான ‘அணியதிப்ராவு’ என்ற மலையாளப் படத்தின் ரீமேக்தான்.

இதையும் பாருங்க : நடிகர் விஜயகுமார் வாங்கிய முதல் கார் இதானாம். சிறு வயது புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.

Advertisement

மேலும், இந்த படம் மலையாளத்தில் மாபெரும் வெற்றியடைய, இந்த படத்தினை தமிழில் ரீ-மேக் செய்யலாம் என்று முடிவை எடுத்தார் இயக்குனர் ஃபாசில் . மேலும், இந்த படத்தில் கதாநாயகியாக ஒரு முன்னணி நடிகையை தேர்வு செய்யலாம் என்று ஃபாசில் எண்ணிய போது ஷாலினி, இந்த படத்தில் நானே நடிக்கிறேன் என்று கேட்டுள்ளார். அதன் பின்னர்தான் இந்த படத்திலும் ஷாலினியே கதாநாயகியாக நடித்துள்ளார்.

Advertisement

இது ஒரு புறம் இருக்க இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க ஃபாசில் முதலில் அணுகியது அப்பாஸ் தான். ஆனால், நடிகர் அப்பாஸ்ஸின் மேனேஜர் சரியான நிர்வாகமின்மை காரணமாக கால்ஷீட்டில் குழப்பத்தை ஏற்படுத்தி விட்டார். இதனால் நடிகர் அப்பாஸ் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. காதலுக்கு மரியாதை படத்திற்கு பின்னர் ஷாலினி, விஜய் யுடன் இணைந்து ‘கண்ணுக்குள் நிலவு’ என்ற படத்தில் நடித்திருந்தார். ஆனால், இந்த திரைப்படம் காதலுக்கு மரியாதை படம் போல வெற்றியடையவில்லை.

Advertisement