நடிகர் விஜயகுமார் வாங்கிய முதல் கார் இதானாம். சிறு வயது புகைப்படத்தை பதிவிட்ட அருண் விஜய்.

0
69155
arunvijay
- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார் நடிகர் அருண் விஜய். அருண் விஜய் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக இருந்த விஜயகுமாரின் மகன் என்பது அனைவருக்கும் தெரிந்ததே. அருண் மலை மலை, இயற்கை, தடையறத் தாக்க, பாண்டவர்பூமி, மாஞ்சா வேலு, குற்றம்23, செக்கசிவந்த வானம், தடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்து உள்ளார். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் இருந்து வருகிறார். இருந்தாலும் சினிமாவில் இவருக்கான அங்கீகாரம் சரியாக அமையவில்லை.

-விளம்பரம்-
Image result for arun vijay and his father"

- Advertisement -

அஜித்துடன் இவர் நடித்த “என்னை அறிந்தால்” படத்தின் மூலம் தான் சினிமாவில் தனெக்கென்ற இடத்தை பிடித்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்தது. தற்போது அருண் விஜய் அவர்கள் தமிழ், தெலுங்கு என்று இரு மொழிகளில் உருவாகி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.கடந்த ஆண்டு பிரபாஸ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த ‘சாஹோ’ படத்தில் அருண் விஜய் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

இதையும் பாருங்க : நீங்க ‘திமுக’ வா ? அஞ்சனாவின் இந்த பதிவால் கேள்வி கேட்ட ரசிகர். அதற்கு அஞ்சனா கூறிய பதில்.

-விளம்பரம்-

இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர்களில் இவரும் ஒருவர். தற்போது இவர் தன்னுடைய சிறு வயதில் தன் தந்தை விஜயகுமார் அவர்கள் முதன் முதலாக வாங்கிய காரின் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர், இது என்னுடைய அப்பா வாங்கிய முதல் கார் என்றும் பதிவிட்டு உள்ளார். தற்போது இந்த புகைப்படம் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

தற்போது இளம் இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘மாஃபியா’ என்ற படத்தில் நடித்து வருகிறார் அருண் விஜய். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன் தயாரிக்கிறது. இந்த படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி இருந்தது. இந்த படத்தில் நடிகர் பிரசன்னா அவர்கள் அருண் விஜய்க்கு வில்லனாக நடித்து உள்ளார். அதோடு இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த விவேக் என்பவர் இயக்கவுள்ள ‘பாஸ்கர்’ என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார் அருண் விஜய்.

அதுமட்டும் இல்லாமல் மூடர் கூடம் நவீன இயக்கத்தில் விஜய் ஆண்டனி, அருண் விஜய், அக்சரா ஹாசன், பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவாகி வரும் படம் அக்னி சிறகுகள். இந்த படத்தை அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று இறுதி கட்டத்திற்கு வந்து இருக்கிறது. இந்த ஆண்டு அருண் விஜய் நடிப்பில் பல சூப்பர் ஹிட் படங்கள் வரும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement