தனது மோசமான புகைப்படத்தை நிகழ்ச்சியில் காட்டியதால் கோபத்துடன் நிகழ்ச்சியில் இருந்து சென்ற ஷாலு ஷம்மு.

0
100774
shalushammu
- Advertisement -

தமிழ் சினிமாவில் துணை கதாபாத்திரத்தில் நடித்து பிரபலம் ஆவது அவ்வளவு எளிதான விஷயம் கிடையாது. அந்தவகையில் தற்போது இளம் நடிகையான ஷாலு சம்மு அதற்கு விதிவிலக்காக இருந்து வருகிறார். சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஷாலு ஷம்மு. அந்த படம் முழுவதும் படத்தின் கதாநாயகியான ஸ்ரீதிவ்யாவுடன் தோழியாக படம் முழுவதும் பயணித்து இருந்தார். மேலும் , இந்த பிடதிதில் இவருக்கும் சூரிக்கும் இடையே வைக்கப்பட்டிருந்த காட்சிகள் ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

-விளம்பரம்-

அந்தப் படத்தில் படு கிராமத்து லுக்கில் தோன்றியிருந்த ஷாலு ஷம்மு அதற்கு பின்னர் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் மாடர்ன் மங்கையாக தோன்றி ரசிகர்களை வியக்க வைத்தார். அதன் பின்னர் பல்வேறு படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த ஷாலு ஷம்மு, இறுதியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி இருந்த மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். இப்படி துணை கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும் ஷாலு ஷம்மு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி தந்தது என்னவோ சமூகவலைதளம் தான்.

- Advertisement -

எப்போதும் சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் ஷாலு ஷம்மு. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடனம் என்ற பெயரில் ஆணுடன் படுகவர்ச்சியாக நடனமாடி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அக்கணம் முதல் பல்வேறு இளைஞர்களின் கனவுக் கன்னியாக மாறிவிட்டார் ஷாலு ஷம்மு. அதனை தொடர்ந்து அடிக்கடி பல்வேறு விதமான கவர்ச்சி புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். தனது உடலை மறைத்துக்கொண்டு படுகவர்ச்சியான ஒரு போட்டோ சூட்டை நடத்தி அதனை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார்.ஆனால் இதே புகைப்படத்தால் தற்போது ஷாலு ஷம்மு தனியார் நிகழ்ச்சியில் கடும் கோபம் அடைந்துள்ளார்.

சமீபத்தில் ஷாலு ஷம்மு ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கேங்ஸ்டர் என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அப்போது ஷாலுவின் சில புகைப்படங்களை திரையில் காட்டியுள்ளனர்கள். அதில் அவர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படம் ஒன்றை காட்டியதால் கடும் கோபமடைந்தஷாலு ஷம்மு நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது வெளியாகி இருக்கிறது. ஆனால், இது உண்மையா பொய்யா என்பது நிகழ்ச்சி வெளியான பின்பு தெரிய வரும்.

-விளம்பரம்-

Advertisement