ஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த பெரிய நடிகர் ? மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அம்மணி.

0
2161
shalu
- Advertisement -

கடந்த சில காலமாகவே இளசுகள் மத்தியில் சென்சேனாக இருந்து வருகிறார் நடிகை ஷாலு ஷம்மு. நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வறுத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது.மேலும் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவிதாவுடன்  படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு.  வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்திருந்தார்.

-விளம்பரம்-

இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் இவர் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் நடனமாடும் இரண்டு விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது. எப்படியும் பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார்.

- Advertisement -

இறுதியாக இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து இருந்தார். இப்படி ஒரு நிலையில் இவர், சினிமாவில் பெரிய நடிகர் படங்களில் நடிக்க படுக்கையை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ள அவர், பெரிய நடிகர்களின் படங்களில் காம்ப்ரமைஸ் செய்துகொள்ள தவறினால் அவர்களின் திறமை நிராகரிக்கப்படுகிறது என்று பதிவிட்டுள்ளார்.

வேடிக்கை உலகம்:

ஷாலு ஷம்மு இது போல மீடூ பற்றி பேசுவது முதன் முறை அல்ல. கடந்த 2019 ஆம் ஆண்டு ரசிகர் ஒருவர் ‘நீங்கள் மீடூவால் பாதிக்கபட்டுள்ளீர்களா என்று கேள்வி கேட்டிருந்தார்’ அதற்கு பதில் அளித்த ஷாலு ஷம்மு ‘விஜய் தேவர்கொண்டா படத்தில் நடிக்க பிரபல இயக்குனர் ஒருவர் தன்னை படுக்கைக்கு அழைத்ததாகவும், அதனை தான் வெளியில் சொல்லவில்லை ‘ என்று கூறியிருந்தார்.அதன் பின்னர் மீடு புகார் தெரிவிதிர்ந்த்தால் சில பட வாய்ப்புகளை தவறவிட்டுள்ளதாக கூறி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-
Advertisement