-விளம்பரம்-
Home பொழுதுபோக்கு சமீபத்திய

‘உங்களுக்கெல்லாம் எங்கிருந்து காசு வருது’ அரை கோடி ரூபாய்க்கு மேல் மதிப்பிலான Jaguar காரை வாங்கிய ஷாலு ஷம்மு பதிவில் கேள்வி எழுப்பும் ரசிகர்கள்.

0
3207

நடிகை ஷம்மு ஷாலு வாங்கிய சொகுசு காரை நெட்டிஷன்கள் விமர்சித்து வரும் பதிவு தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. சமூக வலைதளத்தில் கவர்ச்சி புகைப்படங்கள் மூலம் பிரபலமடைந்தவர்கள் பல பேர் இருக்கின்றனர். அந்த வகையில் சமூக வளைத்தளத்தில் தற்போது இளசுகளின் சென்சேஷன் நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து இருப்பவர் நடிகை ஷாலு ஷம்மு.

-விளம்பரம்-

நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சூரியின் காமெடி கலாட்டாகள் நிறைந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படம் மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்த ஸ்ரீவித்யாவுடன் படம் முழுவதும் தோழியாக நடித்தவர் தான் ஷாலு சம்மு. இந்த படத்திற்கு பின்னர் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தில் ஷம்மு நடித்திருந்தார். பின் விஜய் சேதுபதி நடிப்பில் வந்த றெக்க, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மிஸ்டர் லோக்கல் படத்திலும் ஷம்மு நடித்திருந்தார்.

ஷம்மு ஷாலு திரைப்பயணம்:

இறுதியாக இவர் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் இரண்டாம் பாகமாக வந்த ”இரண்டாம் குத்து ” படத்தில் ஷம்மு நடித்து இருந்தார். அதற்கு பின் இவருக்கு பெரிதாக பட வாய்ப்புகள் வரவில்லை. மேலும், இவர் நடித்த படங்களை விட சமூக வலைதளத்தில் பதிவிட்ட வீடியோக்கள் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். அதிலும் ஷாலு ஷம்மு ஆண் நண்பர்களுடன் பஜாடா நடனமாடும் விடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வந்தது.

இளசுகளை கவர்ந்த ஷாலு :

-விளம்பரம்-

பட வாய்ப்புகளுக்காக தான் அம்மணி இது போன்ற புகைப்படங்களையும் விடீயோக்களையும் பதிவிட்டு வந்தார். இவர் பதிவிடும் புகைப்படங்கள் இளசுகளை சுண்டி இழுத்து விடுகிறது. அதே போல தனது கவர்ச்சியை யார் விமர்சனம் செய்தாலும் அம்மணி ஐ டோன்ட் கேர் என்று தட்டிவிட்டு விடுகிறார். தற்போது பட வாய்ப்புகள் கிடைக்காமல் ஷம்மு சோசியல் மீடியாவில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் இவர் சொகுசு கார் வாங்கி இருப்பதை குறித்து நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வரும் பதிவு இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

-விளம்பரம்-

ஷம்மு வாங்கிய புது கார்:

அதாவது, நடிகை ஷம்மு அவர்கள் தற்போது இவர் ஜகுவார் காரை வாங்கி இருக்கிறார். இது இவருடைய கணவாம். இந்த கார் உடைய மதிப்பு 98 லட்சம் என்று கூறப்படுகிறது. காருடன் எடுத்த புகைப்படத்தை ஷம்மு சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சினிமா பட வாய்ப்புகள் இல்லாத இவருக்கு எப்படி இவ்வளவு விலையில் கார் வாங்க முடியும்? என்றெல்லாம் கேள்வி எழுப்பி இருந்தார்கள்.

நெட்டிசன்கள் கேள்விகளுக்கு பதிலடி:

ஆனால் இவர் புது கார் வாங்கவில்லை. 2018 மாடல் பயன்படுத்திய காரை தான் செகனண்ட் ஆக வாங்கி இருக்கிறார். இதனுடைய விலை 45 லட்சம். அதுமட்டுமில்லாமல் இந்த காரை இவர் இஎம்ஐ முறையில் தான் வாங்கி இருக்கிறார். அதோடு இவர் சுஹா (Suhaa) காஸ்மெடிக் கிளினிக்கின் எக்ஸ்க்யூட்டிவ் டைரக்டராக இருக்கிறார். அதாவது, சினிமா பிரபலங்களின் ஸ்கின் தொடர்பான பிரச்சனைகளை சரி செய்யும் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை ஒன்றை நடத்தி வருவதன் மூலம் வருமானம் ஈட்டுகிறார் .

-விளம்பரம்-

Follow Us at Google News : அனைத்து சினிமா செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள Follow கிளிக் செய்து, பின்தொடர் என்பதை கிளிக் செய்யவும்.

Google news