ஒரு மகளை டாக்டராக்கி இன்னொரு மகளை ஹீரோயின் ஆக்கியுள்ள ஷங்கர். அதுவும் இந்த மாஸ் நடிகரின் படத்தில்.

By Rajkumar · 6/9/2021

தமிழின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஒரு மிக பெரிய பொக்கிஷம் தான்.இந்தியாவில் டாப் 5 இயக்குனர்களில் ஒருவரான ஷங்கர் இதுவரை பல முன்னணி நடிகர்களை வைத்து 12 படங்களை இயக்கியுள்ளார். ஆரம்பத்தில் உதவி இயக்குனராக இருந்த ஷங்கர் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் கூட நடித்துள்ளார். ஜென்டில் மேன் படத்தின் மூலம் அறிமுகமான ஷங்கர் தற்போது வரை பல வெற்றிபடங்களை இயக்கி இருக்கிறார்.

தற்போது 57 வயதாகும் ஷங்கர் ஈஸ்வரி என்ற பெண்ணை பல ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார். ஷங்கருக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கின்றனர்.மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கர், இளைய மகள் அதிதி ஷங்கர், மற்றும் மகன் அர்ஜித் ஷங்கர். இதில் மூத்த மகளான ஐஸ்வர்யா ஒரு மருத்துவர்.

இதையும் பாருங்க : சசி குமார் தாத்தா தியேட்டரில் வேலை, பின் சைக்கிள் ஷாப் - டக்ளஸ் டீக்கடை ஒரிஜினல் ஓனர் இப்போ என்ன பண்றார் தெரியுமா?

டாக்டரான ஐஸ்வர்யா ஷங்கர், புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்தை கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் திருமணம் செய்து கொண்டார். தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரும் தொழிலதிபருமான தாமோதரனின் மகன்தான் இந்த ரோஹித் என்பது குறிப்பிடத்தக்கது.இப்படி ஒரு நிலையில் ஷங்கரின் இன்னொரு மகளான அதிதி தற்போது ஹீரோயினாக அறிமுகமாகி உள்ளார்.

அதுவும் பிரபல நடிகரான கார்த்தியின் 'விருமன்' என்ற புதிய படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகி இருக்கிறார் அதிதி. சூர்யா தயாரிப்பில் உருவாக இருக்கும் இந்த படத்தினை முத்தையா இயக்குகிறார். மேலும், இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். நேற்று இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி இருந்த நிலையில், இந்த படத்தில் நாயகியாக அறிமுகமாகி இருக்கும் ஷங்கர் மகளின் போஸ்டரும் வெளியாகி இருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full