சசி குமார் தாத்தா தியேட்டரில் வேலை, பின் சைக்கிள் ஷாப் – டக்ளஸ் டீக்கடை ஒரிஜினல் ஓனர் இப்போ என்ன பண்றார் தெரியுமா?

0
4840
Paruthiveeran
- Advertisement -

தமிழ் திரை உலகில் 2007 ஆம் ஆண்டு அமீர் இயக்கத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற படம் பருத்திவீரன். இந்த படத்தின் மூலம் தான் நடிகர் கார்த்திக் அவர்கள் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த படத்தில் பிரியாமணி, பொன்வண்ணன், சரவணன், கஞ்சாகருப்பு உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். இந்த படத்தில் நடித்த பல நடிகர்கள் மக்கள் மத்தியில் பிரபலமானார்கள். அந்த வகையில் இந்த படத்தில் ஒரு காட்சியில் நடித்தாலும் இன்றும் மக்கள் மத்தியில் பிரபலமானவராக உள்ளவர் தான் டீ கடை ஓனர் ஆறுமுகம். இந்நிலையில் சமீபத்தில் பிரபல பத்திரிகையாளர்கள் அவரை சந்தித்து பேட்டி எடுத்துள்ளார்கள்.

-விளம்பரம்-

அதில் அவர் தன்னுடைய சினிமா அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பது, அந்த படத்தில் நடித்து பதினைந்து வருடமாகி விட்டது. ஒரு காட்சியில் நடித்து இருந்தாலும் மக்கள் மத்தியில் பிரபலமானது எனக்கு சந்தோசமாக இருக்கு. அப்போ எனக்கு சொந்தமான டீக்கடை ஒன்று இருந்தது. அந்த கடையில் உட்கார்ந்து இருக்கும் போது ஒரு படக் குழுவினர் வந்தனர். எனக்கு என்ன பண்ணப் போறாங்கன்னு எதுவுமே தெரியல. அங்க தாடி வைத்திருந்த ஒருவர் வந்தார். அவர் தான் அமீர் சார் என்று சொன்னாங்க. நானும் வணக்கம் ஐயா அப்படின்னு சொன்னேன்.

இதையும் பாருங்க :‘விஸ்வாசம்’ படத்தை போல மனைவி மற்றும் மகளை பிரிந்து வாழ்ந்து வந்த ‘வீரம்’ பட நடிகருக்கு ரகசிய இரண்டாம் திருமணம்.

- Advertisement -

காமாட்சி அம்மன் டி ஸ்டால் என்ற போர்டு இருந்தது. அதை மேலே கட்டிட்டு நீங்க உட்கார்ந்து எழுதியிருக்கிற மாதிரி இருக்ங்க சொன்னாங்க. நானும் உட்கார்ந்து எழுதிட்டு இருக்கிற மாதிரி இருந்தேன்.அப்ப கார்த்திக் சார் வந்தாரு. அவருக்கு முதல் படம் போல அவரை யாருக்கும் தெரியாது. அப்ப என்னிடம் டயாலாக் சொன்னாங்க. அவங்க சொன்ன மாதிரியே நடித்து தந்தேன்.மேலும், மதுரையில் மூணு தியேட்டரில் அந்த படத்தை போட்டாங்க. நான் போய் பார்த்தேன். அப்ப அங்க இருக்கிற பல பேருக்கு என்னை தெரியலை.

அதுல ஒருத்தர் மட்டும் நீங்க தான் இந்த படத்தில் நடித்தவரான்னு கேட்டாங்க. எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்தது. ஆனால், இந்த படத்துல நடிக்கிறதுக்கு முன்னாடி சைக்கிள் கடை வைத்திருந்தேன். அதுக்கு முன்னாடி பார்த்தீங்கன்னா பிரபல நடிகர் சசிகுமாரின் தாத்தாவோட தியேட்டரில் டிக்கெட் கிழித்து கொடுத்து இருந்தேன். பருத்திவீரனுக்கு அப்புறம் எனக்கு தாமிரபரணி, சீமராஜா, ரஜினி முருகன் போன்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இப்ப எந்த வாய்ப்பும் வரவில்லை. வாய்ப்புகள் கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன் அதற்கான திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறேன் என்று கூறினார்.

-விளம்பரம்-

மேலும், பருத்திவீரம் டப்பிங்கிற்காக சென்னை வந்த போது சந்தித்த பிரச்சனை குறித்து பேசிய ஆறுமுகம், டப்பிங் பேசி முடித்துவிட்டு அமீர் சார், அவரது அசிஸ்டண்ட்டுன் அனுப்பி என்னை மதுரைக்கு பஸ் ஏத்தி விடுமாறு சொன்னார்கள்.அவர்கள் என்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு கூட்டி போய் இதான் மதுர போற பஸ்னு கைல 200 ரூபா குடுத்துங்க. இத வச்சிட்டு நான் எப்படி மதுரை போறதுனு கேட்டுக்கொண்டு இருக்கும் போதே அவங்க அங்கு இருந்து போய்ட்டாரு. அப்புறம் அந்த 200 ரூபாயா வச்சி பாண்டிச்சேரிக்கு போய் எனக்கு தெரிஞ்சவங்க கிட்ட காஸ் வாங்கிட்டு மதுரைக்கு போனேன் என்றார்.

Advertisement