இந்தியன் 2 : ஷங்கருக்கு நோட்டீஸ் அனுப்பிய லைக்கா நிறுவனம்.!

0
714
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல பிரம்மாண்ட படத்தை இயக்கியவர் இயக்குனர் ஷங்கர். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘2.0’ திரைப்படம் உலகம் முழுவதும் பேசப்பட்டது. தற்போது கமலை வைத்து ‘இந்தியன் 2’ படத்தை இயக்கி வருகிறார்.

-விளம்பரம்-
Image result for Shankar And Lyca

இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வந்தது. பர்ஸ்ட் லுக் புகைப்படங்கள் பிரஸ் மீட் என்று அனைத்தும் முடிந்த நிலையில் இந்த படத்தை லைக்கா நிறுவனம் பட்ஜெட் பிரச்சனை காரணமாக கைவிட போவதாக சில தகவல்கள் வெளியானது.

- Advertisement -

இந்தியன் 2 படத்திற்கு பின்னர் ஷங்கர் யாரை வைத்து இயக்க போகிறார் என்ற மிகப்பெரிய கேள்வி நிலவி வருகிறது. இந்நிலையில் இந்தியன் 2 நிலுவையில் உள்ளதால் தற்போது அடுத்த படத்திற்கான வேலையை ஆரம்பிக்க போகிறார் என்ற தகவல் வெளியானது.

இதனால் கடுப்பான லைக்கா நிறுவனம் இதுவரை கோடி கோடியாய் பணத்தை வாரி இறைத்துள்ள லைகா நிறுவனம் ஷங்கருக்கு நோட்டிஸ் அனுப்பி இருப்பதாக கூறப்படுகிறது. அதில் மற்ற பட வேலைகளை உடனடியாக கை விட்டு விட்டு இந்தியன் 2 படத்தை முடித்து கொடுக்குமாறு கேட்டு கொண்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

-விளம்பரம்-
Advertisement